Last Updated:
சில நாடுகளில் விசா கட்டணம் பயணச் செலவை விட அதிகமாக இருக்கலாம்.
உலகில் எந்த நாட்டுடைய விசா அதிக விலை மதிப்புடையது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விசா என்பது ஒரு நாட்டின் அரசாங்கத்தால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அனுமதியாகும். ஒரு வெளிநாட்டவர் குறிப்பிட்ட நோக்கத்திற்காக (சுற்றுலா, வேலை, படிப்பு போன்றவை) அந்த நாட்டின் எல்லைக்குள் நுழைவதற்கும், அங்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தங்குவதற்கும் இந்த அனுமதி அவசியமாகும்.
விசா பொதுவாக நீங்கள் செல்ல விரும்பும் நாட்டின் தூதரகம் (Embassy) அல்லது துணைத் தூதரகத்தில் (Consulate) விண்ணப்பித்து, உங்கள் பாஸ்போர்ட்டில் முத்திரையாகவோ அல்லது ஒரு தனி ஆவணமாகவோ வழங்கப்படும்.
சில நாடுகளில் விசா கட்டணம் பயணச் செலவை விட அதிகமாக இருக்கலாம். உலகின் மிக விலையுயர்ந்த சுற்றுலா விசா வைத்திருக்கும் நாடாக பூடான் உள்ளது.
ஒரு பயணி ஐந்து நாட்கள் பூட்டானில் தங்கினால், ஹோட்டல் மற்றும் விமானச் செலவுகளைத் தவிர்த்து, அரசாங்கக் கட்டணமாக மட்டுமே 500 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக அதாவது சுமார் 47 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
இதில் இந்தியா, வங்கதேசம் மற்றும் மாலத்தீவை சேர்ந்தவர்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படுகிறது. பூடான், அதன் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க “அதிக மதிப்பு, குறைந்த அளவு” (High Value, Low Volume) என்ற சுற்றுலா கொள்கையைப் பின்பற்றுகிறது.
November 12, 2025 7:55 PM IST
அமெரிக்கா, பிரிட்டன் கிடையாது.. உலகில் மிகவும் காஸ்ட்லியான விசா எந்த நாட்டுடையது தெரியுமா?


