• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தேர்தல்களின் போது குண்டுவெடிப்புகள் நிகழ்வது ஏன்? – மத்திய அரசு விசாரிக்க சித்தராமையா கோரிக்கை | Why do blasts happen during elections Siddaramaiah demands central government probe

GenevaTimes by GenevaTimes
November 12, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
தேர்தல்களின் போது குண்டுவெடிப்புகள் நிகழ்வது ஏன்? – மத்திய அரசு விசாரிக்க சித்தராமையா கோரிக்கை | Why do blasts happen during elections Siddaramaiah demands central government probe
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மைசூரு: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கோரிக்கை வைத்தார். மேலும், தேர்தல்களின் போது குண்டுவெடிப்புகள் ஏன் நிகழ்கின்றன என்றும் கேள்வியெழுப்பினார்.

மாவட்ட அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “பிஹார் தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த குண்டுவெடிப்பு நடந்தது மிகவும் கவலையளிக்கிறது. தேர்தல்களின் போது குண்டுவெடிப்புகள் ஏன் நிகழ்கின்றன?. மத்திய அரசு இந்த கேள்வி குறித்து விசாரித்து பதிலளிக்க வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது அனுதாபங்கள். உண்மையை வெளிக்கொணரவும், பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என்பதை சரிபார்க்கவும் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்

இதற்கிடையில், கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்தார். அவர், “டெல்லி குண்டுவெடிப்புக்கு காரணமான பாதுகாப்பு குறைபாட்டிற்கு அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும். சுதந்திர இந்தியாவின் மிகவும் திறமையற்ற உள்துறை அமைச்சரான அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். வேறு எந்த மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ இதுபோல நடந்திருந்தால், அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருப்பார்.

ஆனால் பிரதமர் மோடியின் அனைத்து ரகசியங்களையும் அறிந்திருப்பதால் அவர் முக்கியமானவராக இருக்கிறார். புல்வாமா தாக்குதல் மற்றும் மணிப்பூரில் நெருக்கடி உட்பட அமித் ஷாவின் ஆட்சிக் காலத்தில் மீண்டும் மீண்டும் பாதுகாப்பு தோல்விகள் ஏற்பட்டு வருகிறது. எல்லைகளைப் பாதுகாப்பது யாருடைய பொறுப்பு, ராகுல் காந்தியின் கடமையா அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கடமையா?” என்று கேள்வி எழுப்பினார்



Read More

Previous Post

Herbal tea இன் மருத்துவ நன்மைகள்

Next Post

“சவாலுக்​கு காத்​திருக்​கிறேன்” – சொல்கிறார் வேகப்​பந்து வீச்​சாளர் முகமது சிராஜ் | Fast Bowler Mohammed Siraj Speak South Africa Test Cricket Series

Next Post
“சவாலுக்​கு காத்​திருக்​கிறேன்” – சொல்கிறார் வேகப்​பந்து வீச்​சாளர் முகமது சிராஜ் | Fast Bowler Mohammed Siraj Speak South Africa Test Cricket Series

“சவாலுக்​கு காத்​திருக்​கிறேன்” - சொல்கிறார் வேகப்​பந்து வீச்​சாளர் முகமது சிராஜ் | Fast Bowler Mohammed Siraj Speak South Africa Test Cricket Series

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin