சிங்கப்பூர்: NETS மற்றும் PayNow போன்ற மின்-கட்டண பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை தானே ஏற்றுக்கொள்வதாக Singapore Pools கூறியுள்ளது.
நேற்று நவம்பர் 11 ஆம் தேதி முதல் இது நடப்புக்கு வந்ததாக Singapore Pools செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பரிவர்த்தனைக் கட்டணங்கள் குறித்து வங்கிகள், ABS வங்கிகள் சங்கம் மற்றும் NETS ஆகியவற்றுடன் மறுஆய்வு செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
இந்த முடிவின் விளைவாக, இனி PayNow பரிவர்த்தனைக் கட்டணங்களையும், மேலும் FAST மற்றும் NETS உள்ளிட்ட பிற மின்-பரிவர்த்தனைக் கட்டணங்களையும் Singapore Pools ஏற்றுக்கொள்ளும்.
Singapore Pools, இதற்கு முன்னர் வாடிக்கையாளர்களிடம் ஒவ்வொரு PayNow பரிவர்த்தனைக்கும் 10 காசுகள் வசூலித்து வந்தது.
இந்த முடிவுக்கு அதன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
லிட்டில் இந்தியாவில் சந்துக்குள் இழுத்துச் சென்று தாக்கி கொள்ளை – இளைஞர் கைது

