கோலாலம்பூர்:
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஜோகூரின் உலு திராம் காவல்நிலையத்தில் தாக்குதல் நடத்தி, இரு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபருக்கு எவ்வித பயங்கரவாதக் குழுவுடனும் தொடர்பில்லை என்று, தேசிய காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சந்தேக நபருக்கு ஜமா இஸ்லாமியா அமைப்புடன் தொடர்பு இருப்பதாகாக் கூறப்பட்ட நிலையில், சந்தேக நபரின் 62 வயாதன தந்தையே குறித்த அமைப்பின் உறுப்பினர் என்றும், 21 வயதான சந்தேக நபர் எந்தவித பயங்கரவாத செயலிலும் ஈடுபடவில்லை என்றும், அவர் தனியாகவே இந்த தாக்குதலில் ஈடுபட்டார் என்றும் அவர் சொன்னார்.
இது தொடர்பில் 46 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், மேலதிக விசாரணைக்காக குறித்த சந்தேக நபரும் குடும்பத்தினர் ஐவர் குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.


