பரபரப்பான நேரம் என்பதால் வெடித்து சிதறிய கார் அருகே ஏராளமான வாகனங்கள் இருந்தன. அதில் குறிப்பிடத்தக்க அளவில் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கார் வெடித்த உடனே மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. தீயானது அருகில் இருந்த மற்ற வாகனங்களிலும் பரவியது. கார் குண்டு வெடிப்பு சம்பவத்தால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அருகில் உள்ள கட்டடங்களின் கண்ணாடிகள் வெடித்து சிதறின. இதனிடையே, டெல்லியில் கார் குண்டு வெடிப்பு நடத்த இடத்தை சீல் செய்து, காவல் துறை, என்.ஐ.ஏ., தேசிய பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.


