• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Delhi Red Fort Blast | “புல்வாமா… பஹல்காம்.. இந்தியர்கள் எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வார்கள்?” – தேஜஸ்வி யாதவ் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Delhi Red Fort Blast | “புல்வாமா… பஹல்காம்.. இந்தியர்கள் எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வார்கள்?” – தேஜஸ்வி யாதவ் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 10, 2025 10:29 PM IST

டெல்லி செங்கோட்டை அருகே Hyundai i-20 கார் வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம். தேஜஸ்வி யாதவ் தேசிய பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.

News18
News18

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு விபத்து குறித்து பேசியுள்ள ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ், “இந்தியர்கள் எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் கேட் 1 அருகே நடந்த கார் வெடிகுண்டு விபத்தில் இதுவரை 13 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நியூஸ்18க்கு கிடைத்த தகவலின்படி இந்த கார் வெடிகுண்டு விபத்து தீவிரவாத தாக்குதல் எனச் சொல்லப்படுகிறது.

இந்தச் சம்பவம் நடந்ததும், மத்திய உள்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அமித்ஷா, மாலை 7 மணிக்கு ஹுண்டாய் ஐ-20 கார் வெடித்து இந்தச் சம்பவம் நடந்தது என்றும் அடுத்தடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து நேரடியாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களைச் சந்தித்தார். அதன்பின் சம்பவ இடத்திற்குச் செல்ல இருக்கிறார்.

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு விபத்துக்கு பிரதமர், முதலமைச்சர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிகார் முதலமைச்சர் வேட்பாளரும், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவருமான தேஜஸ்வி இது தொடர்பாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்த துயரச் செய்தி கிடைத்தது. நாட்டின் தலைநகரில் நடந்த இதுபோன்ற ஒரு குண்டுவெடிப்பு மிகவும் கவலையளிக்கிறது, துயரத்தை அளிக்கிறது. இந்த வேதனையான சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

दिल्ली में लाल किला के पास हुए कार विस्फोट की दुःखद सूचना मिली। देश की राजधानी में ऐसे विस्फोट चिंताजनक और पीड़ादायक है। इस दर्दनाक हादसे में जिन परिवारों ने अपने निर्दोष प्रियजनों को खोया है, उनके प्रति गहरी संवेदनाएं व्यक्त करता हूँ तथा सभी घायलों के शीघ्र अति शीघ्र स्वस्थ होने… pic.twitter.com/U3ixGKC4OE


— Tejashwi Yadav (@yadavtejashwi) November 10, 2025

தேசிய பாதுகாப்பு விஷயங்களில் – அது புல்வாமாவாக இருந்தாலும் சரி, பஹல்காமாக இருந்தாலும் சரி – நாங்கள் அரசாங்கத்துடன் உறுதியாக நின்றோம். நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை விட வேறு எதுவும் முக்கியமில்லை.

இந்த விஷயத்தில் முழுமையான விசாரணை நடத்தி, நியாயமான மற்றும் வெளிப்படையான நடவடிக்கை மூலம் பொதுமக்களுக்கு உறுதியளிக்கவும், குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான பாடம் கற்பிக்கவும் மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியர்கள் எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வார்கள்? ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 10, 2025 10:29 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Delhi Red Fort Blast | “புல்வாமா… பஹல்காம்.. இந்தியர்கள் எவ்வளவு காலம் பயத்தின் நிழலில் வாழ்வார்கள்?” – தேஜஸ்வி யாதவ்

Read More

Previous Post

ஊடகங்களை புறக்கணித்து ஓட்டம் பிடித்த செல்வம் எம்பி

Next Post

IPL Auction 2026 : 2 வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவிக்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா ஆலோசனை.. | விளையாட்டு

Next Post
IPL Auction 2026 : 2 வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவிக்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா ஆலோசனை.. | விளையாட்டு

IPL Auction 2026 : 2 வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவிக்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா ஆலோசனை.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin