• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆன்லைன் பேமென்ட் முன்பைவிட மிகவும் பாதுகாப்பாக இருக்க புதிய அம்சம்…! PhonePe-ன் அப்டேட்… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆன்லைன் பேமென்ட் முன்பைவிட மிகவும் பாதுகாப்பாக இருக்க புதிய அம்சம்…! PhonePe-ன் அப்டேட்… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பல சந்தர்ப்பங்களில் UPI மூலம் தெரியாத நம்பருக்கு பணத்தை அனுப்புபவர்கள், பின்னர் தாமதமாகத்தான் அது ஒரு மோசடி என்பதை அறிந்து கொள்கிறார்கள். யூஸர்கள் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், பிரபல டிஜிட்டல் பேமென்ட் மற்றும் நிதி சேவைகள் நிறுவனமான PhonePe, பேமென்ட்ஸ்களுக்கான பாதுகாப்பை புதிய நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் PhonePe Protect என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் உலகில் யூஸர்களின் பணத்திற்கான தனிப்பட்ட பாதுகாப்பு கவசமாக இந்த அம்சம் இருக்கும் என்று PhonePe நிறுவனம் கூறி இருக்கிறது. ஒருவேளை யூஸர்கள் சந்தேகத்திற்கிடமான அல்லது மோசடி நம்பருக்கு பணம் செலுத்த முயற்சிக்கும்போது, இந்த ஆப் உடனடியாக யூஸர்களை எச்சரிக்கும்.

PhonePe Protect என்றால் என்ன?

PhonePe Protect என்பது ஆன்லைன் மோசடியில் இருந்து யூஸர்களை பாதுகாக்கும் ஒரு மேம்பட்ட பாதுகாப்பான பேமென்ட் அம்சமாகும். இந்த அம்சமானது அரசாங்க தரவுத் தளங்களுடன் இணைக்கப்பட்ட தரவைப் பயன்படுத்தி ஒரு மொபைல் நம்பரின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும். குறிப்பிட்ட நம்பருக்கு ஏதேனும் நிதி மோசடியுடன் தொடர்பு இருந்தால், ஆப்-ஆனது பேமென்ட்டை தடுக்கிறது அல்லது யூஸர்களை எச்சரிக்கும். சுருக்கமாகச் சொன்னால் PhonePe Protect என்பது ரியல்-டைம் அலெர்ட்ஸ்களை வழங்குவதன் மூலமும், அதிக ஆபத்துள்ள பேமென்ட்ஸ்களை தடுப்பதன் மூலமும் யூஸர்களை மோசடி பரிவர்த்தனைகளிலிருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு பாதுகாப்பு அம்சமாகும்.

இந்த அம்சம் எவ்வாறு செயல்படுகிறது?

இந்த அம்சத்திற்காக மத்திய தொலைத்தொடர்புத் துறையின் (DoT), Financial Fraud Risk Indicator (FRI) தரவை நிறுவனம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. FRI என்பது நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள மொபைல் நம்பர்களை கண்காணிக்கும் ஒரு அரசு கருவி ஆகும், இது டிஜிட்டல் சார்ந்த நிதி குற்றங்களைத் தடுக்க நிறுவனங்களுக்கு உதவுகிறது. யூஸர்கள் பேமென்ட் செய்யப் போகிறார்கள் என்றால், சிஸ்டம் உடனடியாக நம்பரை சரிபார்க்கும், ஒருவேளை ரிஸ்க் என்பது கண்டறியப்பட்டால் திரையில் ஒரு எச்சரிக்கையைக் காண்பிக்கும்.

ரிஸ்க் லெவலை அடிப்படையாகக் கொண்ட எச்சரிக்கைகள்:

இந்த அம்சத்தின்கீழ், நம்பர்கள் வெவ்வேறு ரிஸ்க் கேட்டகிரிகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அரசு பதிவுகளில் ஒரு நம்பர் மிகவும் அதிக ஆபத்து என்று பட்டியலிடப்பட்டிருக்கிறது என்றால், PhonePe அந்த நம்பருக்கான பேமென்ட்டை தடுத்து, ஏன் என்பதற்கான காரணத்தையும் வழங்கும். இருப்பினும், அந்த நம்பர் மீடியம் ரிஸ்க் என்ற வகையின் கீழ் வந்தால், யூஸருக்கு எச்சரிக்கை காட்டப்படும், இதனால் பணம் அனுப்பலாமா இல்லை வேண்டாமா என்ற முடிவு யூஸர்களின் கையில் இருக்கும்.

PhonePe-ன் இந்த நடவடிக்கை டிஜிட்டல் பேமென்ட் செக்டரில் பாதுகாப்பிற்கு ஒரு புதிய வழியை வழங்கும். அதிகரித்துவரும் சைபர் மோசடிகளுக்கு மத்தியில் இந்த அம்சம் ஒரு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு கேடயமாக மாறக்கூடும். சந்தேகத்திற்கிடமான நம்பரை கண்டவுடன் மக்கள் உஷாராகும்போது, ​​மோசடி பாதிப்பு எண்ணிக்கையில் நிச்சயமாக குறிப்பிடத்தக்க வேறுபாடு இருக்கும்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 10, 2025 7:45 PM IST

Read More

Previous Post

ஐபிஎல் 2026 : புதிய கேப்டன்களை நியமிக்க வாய்ப்புள்ள அணிகள்.. சென்னை அணியில் மாற்றம் இருக்குமா? | விளையாட்டு

Next Post

இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை கண்டுபிடிக்க போலீசார் உதவுவர் – சைஃபுதீன் | Makkal Osai

Next Post
இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை கண்டுபிடிக்க போலீசார் உதவுவர் – சைஃபுதீன் | Makkal Osai

இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை கண்டுபிடிக்க போலீசார் உதவுவர் - சைஃபுதீன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin