வரலாற்றுச் சிறப்பு மிக்க நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று இடம்பெறவுள்ளது.
இதற்காக அயோத்தி இராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சீதையம்மனுக்கான சீர்வரிசைப் பொருள்கள் மற்றும் இந்திய புண்ணிய நதிகளின் தீர்த்தம் என்பவற்றை தாங்கிய ஊர்தி நேற்று சீதையம்மன் ஆலயத்தை சென்றடைந்துள்ளது.
சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன், மனித நேயத் தலைவர், ஆன்மீக குரு, அமைதித் தூதுவர் மற்றும் வாழும் கலை பயிற்சியின் நிறுவுனர் பூஜ்ய ஸ்ரீ ரவிசங்கர் இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று இலங்கை வந்துள்ளார். (a)

