• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“பள்ளிகளில் இனி கட்டாயம் இந்தப் பாடல் பாட வேண்டும்..” – உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“பள்ளிகளில் இனி கட்டாயம் இந்தப் பாடல் பாட வேண்டும்..” – உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 10, 2025 4:34 PM IST

உத்தரப்பிரதேச கல்வி நிறுவனங்களில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

News18
News18

உத்தரப்பிரதேசத்தில் கல்வி நிறுவனங்களில் வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்கி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்த பாடல் வந்தே மாதரம். இந்தப் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதனை அடுத்து, மத்திய அரசு சார்பில், வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டது.

அதன்படி கடந்த 7ஆம் தேதி டெல்லியில் வந்தே மாதரம் 150 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். மேலும், அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நமது ராணுவம், எதிரிகளின் சதித் திட்டங்களை முறியடிக்கும்போதும், தீவிரவாதத்தை முறியடிக்கும்போதும், நமது வீரர்களின் ஒரே மந்திரமாக வந்தே மாதரம் விளங்குகிறது. இந்தப் பாடல் இந்தியாவை ஒன்றிணைக்கிறது. நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று, உத்தரப்பிரதேசம் மாநிலம், கோரக்பூரில் ஒற்றுமை யாத்திரை சென்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், அப்படி எதிர்த்தால் அவர்கள் இந்தியாவை பிரிவினைப்படுத்த விரும்புபவர்கள் என்றும் கூறினார்.

மேலும், பாரத மாதா மற்றும் தாய்நாட்டின் மீதான ஒவ்வொருவரின் மதிப்பையும், பக்தியையும் அதிகப்படுத்த உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடல் கட்டாயமாக ஒலிக்கப்பட வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.

#WATCH | Uttar Pradesh CM Yogi Adityanath says, “…We should make Sardar Vallabhbhai Patel a part of our discussions…We will make the recital of ‘Vande Mataram’ mandatory in all educational institutions in UP so that every citizen in UP is filled with a sense of respect for… pic.twitter.com/oxnm2qYfGJ


— ANI (@ANI) November 10, 2025

வந்தே மாதரம் பாடலில் உள்ள சில வரிகளை 1937ஆம் ஆண்டு காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டி நீக்கியதாக பிரதமர் மோடி அண்மையில் குற்றஞ்சாட்டினார். அதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 10, 2025 4:34 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“பள்ளிகளில் இனி கட்டாயம் இந்தப் பாடல் பாட வேண்டும்..” – உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

Read More

Previous Post

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

Next Post

மேற்கு இந்தியத் தீவுகளுடன் 3-வது டி20: 9 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி | new zealand beats west indies in third t20 cricket

Next Post
மேற்கு இந்தியத் தீவுகளுடன் 3-வது டி20: 9 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி | new zealand beats west indies in third t20 cricket

மேற்கு இந்தியத் தீவுகளுடன் 3-வது டி20: 9 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி | new zealand beats west indies in third t20 cricket

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin