Last Updated:
அமெரிக்க அரசு முடக்கம் 40 நாட்கள் நீடித்து, டொனால்ட் டிரம்ப் விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்க அரசு முடக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தடைபட்டுள்ளதுடன், பெரும்பாலானோரை கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அமெரிக்க அரசுக்கான நிதி முடக்கம் 40 நாட்களாக நீடித்து வரும் நிலையில், செனட் சபையில் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், ஜனவரி 30ஆம் தேதி வரை அமெரிக்க அரசுக்கு நிதியளிப்பதற்கு தயாராக இருப்பதாக செனட் தலைவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தெரிகிறது. அதைத்தொடர்ந்து செனட் சபையில் இதுதொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அரசு முடக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதன்மூலம், அமெரிக்காவில் அத்தியாவசிய சேவைகள் விரைவில் மீட்டெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
November 10, 2025 4:00 PM IST


