• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மாஸ்க்டு ஆதார்னா என்ன…? அத எப்படி டவுன்லோட் பண்ணனும்…? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மாஸ்க்டு ஆதார்னா என்ன…? அத எப்படி டவுன்லோட் பண்ணனும்…? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 10, 2025 1:53 PM IST

பொருளாதார மற்றும் தனிநபர் சரிபார்ப்பு செயல்முறையில் ஆதாரின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்துவரும் இந்த சமயத்தில் ஆதாரில் உள்ள விவரங்களை பாதுகாப்பான முறையில் சேமிப்பது மிகவும் அவசியமாகிறது. அதனை செய்வதற்கு மாஸ்க்டு ஆதார் உதவுகிறது.

Rapid Read
News18
News18

ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் வழங்கும் ஒரு 12 இலக்க தனித்துவமான எண்ணாகும். இது பல்வேறு அரசு தொடர்பான பலன்கள் மற்றும் நலத்திட்டங்கள் பெறுவதற்கு ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இதுதவிர ஆதார் என்பது அட்மிஷன், பேங்கிங், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு படிவங்களில் ஒரு அடையாள சான்றிதழாகவும் செயல்படுகிறது.

பொருளாதார மற்றும் தனிநபர் சரிபார்ப்பு செயல்முறையில் ஆதாரின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்துவரும் இந்த சமயத்தில் ஆதாரில் உள்ள விவரங்களை பாதுகாப்பான முறையில் சேமிப்பது மிகவும் அவசியமாகிறது. அதனை செய்வதற்கு மாஸ்க்டு ஆதார் உதவுகிறது.

மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன?

மாஸ்க்டு ஆதாரில் ஒரு ஆதார் அட்டையில் உள்ள முதல் 8 இலக்கங்கள் மறைக்கப்பட்டு, கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே வெளிப்படையாக அச்சிடப்பட்டிருக்கும். இந்த மறைக்கப்பட்ட எண்கள் xxxxxxxx மூலமாக மாற்றப்பட்டு இருக்கும். இதன் மூலமாக உங்களுடைய முழுமையான ஆதார் விவரங்களை பிறர் உங்கள் அனுமதியில்லாமல் பயன்படுத்துவதை தடுக்கலாம்.

இது பிரைவசியை அதிகரித்து, அடையாளத் திருட்டு மற்றும் மோசடி ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. வழக்கமான ஆதாரோடு ஒப்பிடும்போது இந்த மாஸ்க்டு ஆதார் அட்டையும் சமமாக செல்லுபடியாகும் என்பதை 2016ஆம் ஆண்டு வெளியான ஆதார் விதி கூறுகிறது. பெரும்பாலான e-KYC செயல்முறைகள் அதாவது டிக்கெட் மற்றும் ஹோட்டல் புக்கிங் செய்வது, வேலை விண்ணப்பங்கள் போன்றவற்றிற்கு மாஸ்க்டு ஆதாரைப் பயன்படுத்தலாம்.

UIDAI வெப்சைட்டில் இருந்து மாஸ்க்டு ஆதார் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி?

  • முதலில் நீங்கள் UIDAI வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும்.
  • அங்கு ‘My Aadhaar’ டேபின் கீழ் காணப்படும் ‘Download Aadhaar’ ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
  • இப்போது உங்களுடைய 12 இலக்க ஆதார் நம்பர் அல்லது 28 இலக்க என்ரோல்மென்ட் ID (EID) அல்லது 16 இலக்க வெர்சுவல் ID (VID) ஆகியவற்றில் ஒன்றை என்டர் செய்யுங்கள்.
  • கொடுக்கப்பட்டுள்ள கேப்சா கோடை நிரப்பிவிட்டு ‘Send OTP’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் கிடைத்த OTP-ஐ என்டர் செய்யவும்.
  • ”Do you want a masked Aadhaar?” என்ற பெட்டியை டிக் செய்யுங்கள்.
  • உங்களுடைய அடையாளத்தை நிரூபிப்பதற்கு பெறப்பட்ட வெரிஃபிகேஷன் கோடை என்டர் செய்ய வேண்டும்.
  • பின்னர் ‘Verify and Download’ என்பதை தேர்வு செய்யுங்கள்.
  • இப்போது பாஸ்வோர்ட் மூலமாக பாதுகாக்கப்பட்ட ஒரு PDF ஆவணமாக உங்களுடைய மாஸ்க்டு ஆதார் டவுன்லோட் செய்யப்படும்.
  • இதற்கான பாஸ்வேர்ட் என்பது உங்களுடைய பெயரின் முதல் 4 எழுத்துக்கள் (கேப்பிட்டல் லெட்டரில்) மற்றும் நீங்கள் பிறந்த வருடம் ஆகும்.

mAadhaar மூலமாக மாஸ்க்டு ஆதார் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி?

  • முதலில் mAadhaar அப்ளிகேஷனை ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுடைய விருப்ப மொழி, பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் பெறப்பட்ட OTP ஆகியவற்றை வழங்கவும்.
  • இப்போது டேஷ் போர்டில் உள்ள ‘Get Aadhaar’ என்பதன் கீழ் உள்ள ‘Download Aadhaar’ ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
  • ஆதார் வகையிலிருந்து Masked Aadhaar என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • உங்களுடைய ஆதார் நம்பர், EID அல்லது VID மற்றும் கேப்சா கோடை என்டர் செய்யுங்கள்.
  • மொபைல் நம்பரில் கிடைத்த வெரிஃபிகேஷன் OTP-ஐ என்டர் செய்து ‘Verify and Download’ என்பதை தேர்வு செய்யுங்கள்.
  • இப்போது உங்களுடைய மாஸ்க்டு ஆதார் டவுன்லோட் ஆகிவிடும்.

DigiLocker மூலமாக மாஸ்க்டு ஆதார் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி?

  • DigiLocker-க்கு சென்று உங்களுடைய மொபைல் நம்பர், லாகின் ID, பாஸ்வேர்ட் அல்லது ஆதார் நம்பர் மூலமாக லாகின் செய்யவும்.
  • OTP வெரிஃபிகேஷன் செயல்முறையை நிறைவு செய்யுங்கள்.
  • இப்போது சர்ச் பாரில் UIDAI என்று தேடி அதில் ‘Aadhaar’ என்பதை தேர்வு செய்யுங்கள்.
  • உங்களுடைய 12 இலக்க ஆதார் நம்பரை என்டர் செய்துவிட்டு மொபைல் நம்பரில் கிடைத்த OTP-ஐ பயன்படுத்தி வெரிஃபை செய்யவும்.இப்போது உங்களுடைய மாஸ்க்டு ஆதார் ‘Issued Documents’ டேபின் கீழ் காணப்படும். அங்கிருந்து அதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 10, 2025 1:53 PM IST

Read More

Previous Post

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி தேடி வரும்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வர்மா நம்பிக்கை | act with confidence success will come your way Indian cricketer Shafali Verma

Next Post

வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் டிவிடெண்ட் வழங்குவேன்: ட்ரம்ப் | I will give 2000 dollar to every American Those who oppose tax are fools Trump announced

Next Post
வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் டிவிடெண்ட் வழங்குவேன்: ட்ரம்ப் | I will give 2000 dollar to every American Those who oppose tax are fools Trump announced

வரி வருவாயிலிருந்து அமெரிக்கர்களுக்கு தலா 2000 டாலர் டிவிடெண்ட் வழங்குவேன்: ட்ரம்ப் | I will give 2000 dollar to every American Those who oppose tax are fools Trump announced

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin