பட்டர்வொர்த்:
பட்டர்வொர்த் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை மீறிச் சென்ற ஆறு பெட்டிகள் கொண்ட கோம்யூட்டர் ரயிலை தடத்திலிருந்து அகற்றும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
மீட்பு நடவடிக்கைகள் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று மாலை 7.51 மணிக்கு KTM ரயில் சேவைகள் மீண்டும் இயல்புநிலைக்கு வந்துவிட்டன என்று, KTMB நிறுவனம் தெரிவித்துள்ளது.
“மீட்பு பணிகளின் போது பொறுமை மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பயணிகளுக்கும் KTMB தனது நன்றியை தெரிவிக்கிறது,” என KTMB வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட ரயிலில் பயணிகள் எவரும் இருக்கவில்லை. அது வழக்கமான தினசரி செயல்பாடுகளுக்காக இயக்கப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த தடம் மீறுதல் சம்பவத்தில் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு எதுவும் இல்லை.
சம்பவத்துக்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று KTMB கூறியுள்ளது.
பயணிகள் பாதுகாப்பு மற்றும் சேவை தரத்தை மேம்படுத்துவதுதான் நிறுவனத்தின் முதன்மை முன்னுரிமை எனவும் அது வலியுறுத்தியுள்ளது.
விசாரணை முடிவுகள் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
The post பட்டர்வொர்த் ரயில் நிலையத்தில் தடத்தை மீறிய KTM ரயில் அகற்றப்பட்டது: சேவைகள் மீண்டும் தொடக்கம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

