கோலாலம்பூர்:
கல்வி அமைச்சகத்தின் கீழுள்ள பள்ளிகள் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அதிவேக இணையச் சேவையை அனுபவிக்கலாம் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி பட்சில் தெரிவித்தார்.
PoP திட்டத்தின் கீழ் மலிவான விலையில், நிலையான மற்றும் அதிவேக இணையச் சேவை வசதி வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
கல்வி அமைச்சகத்தின் கீழுள்ள சுமார் 10,000 பள்ளிகளுக்கு இந்தச் சேவை முதலில் வழங்கப்படவுள்ளது என்றும்,
இந்தத் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை, குறிப்பாக சபா மாநில மக்கள், தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறையை சிறப்பாக முன்னெடுக்கவும் உதவும் என்றார்.
இதில் மக்கள் சிறந்த தொலைத்தொடர்பை அனுபவிக்க வசதியாக, குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே தொலைத்தொடர்பு கோபுரத்தின் செயல்பாட்டை ஒருங்கிணைக்க அதன் ஒப்பந்ததாரர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகிய இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.


