• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்; ரஞ்சி வரலாறு படைத்த மேகாலயா வீரர் ஆகாஷ் சவுத்ரி: 11 பந்துகளில் அரைசதம்! | Meghalaya Cricket Player Akash Chowdary Hit 6 Sixes in One Over at Ranji Trophy

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்; ரஞ்சி வரலாறு படைத்த மேகாலயா வீரர் ஆகாஷ் சவுத்ரி: 11 பந்துகளில் அரைசதம்! | Meghalaya Cricket Player Akash Chowdary Hit 6 Sixes in One Over at Ranji Trophy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஞ்சி டிராபி பிளேட் குரூப் ஆட்டத்தில் மேகாலயா வீரர் ஆகாஷ் சவுத்ரி அருணாசலப் பிரதேச அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி ஆகியோருடன் மேல்மட்ட சாதனைப் பட்டியலில் இணைந்தார்.

ஆகாஷ் சவுத்ரி 8 பவுண்டரிகளுடன் 14 பந்துகளில் அரைசதம் கண்டு இன்னொரு சாதனையையும் நிகழ்த்தினார். மேகாலயா அணி 628/6 என்று டிக்ளேர் செய்தது.

அருணாச்சலப்பிரதேச இடது கை சுழற்பந்து வீச்சாளர் லிமார் காளி தாபி என்ற பவுலரின் ஓவரில்தான் ஆகாஷ் சவுத்ரி 6 சிக்சர்களை விளாசி சாதனைப்பட்டியலில் இணைந்தார். இன்னிங்சின் 126வது ஓவரில்தான் இந்த சாத்துமுறை நடந்தது.

1984-85 ரஞ்சி டிராபியில் ரவி சாஸ்திரி 6 சிக்சர்களை திலக்ராஜ் என்ற பவுலரை விளாசிய பிறகு இப்போதுதான் மீண்டும் ரஞ்சியில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் சாதனைக்குச் சொந்தக்காரார் ஆனார் ஆகாஷ் சவுத்ரி. முதல் தரக் கிரிக்கெட்டில் இத்தகைய சாதனை மூன்றாவது முறையாக நிகழ்கிறது.

11 பந்துகளில் ஆகாஷ் சவுத்ரி 8 சிக்சர்களுடன் அரைசதம் கண்டார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டிலேயே அதிவேக அரைசத வரலாற்றுச் சாதனையையும் நிகழ்த்தினார்.

இதற்கு முன்னர் 2012-ம் ஆண்டில் எஸ்செக்ஸ் அணிக்கு எதிராக லீஷயர் அணிக்காக வெய்ன் ஒயிட் என்ற வீரர் 12 பந்துகளில் அரைசதம் கண்டு சாதனை படைத்துள்ளார். 1965-ல் நாட்டிங்கம் ஷயர் அணிக்கு எதிராக இதே லீ ஷயர் வீரர் கிளைவ் இன்மேன் 13 பந்துகளில் அரைசதம் கண்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 2007 ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ் ஒரே ஒவரில் 6 சிச்கர்களையும் அதே 2007 முதல் டி20 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்களையும், இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் கிரன் போலார்டு ஒரே ஓவரில் 6 சிக்சர்களையும் விளாசி உள்ளனர்.

ஆகாஷ் குமார் சவுத்ரி 25 வயதாகும் மேகாலயா அணி வீரர். இயற்பெயர் ஆகாஷ்குமார் சவுத்ரி. வலது கை பேட்டர், வலது கை வேகப்பந்து வீச்சாளர். இதுவரை 30 முதல்தரப் போட்டிகளில் ஆடி 503 ரன்களையும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 28 போட்டிகளில் 203 ரன்களையும் டி20களில் 30 ஆட்டங்களில் 107 ரன்களையும் எடுத்துள்ளார்.

பந்து வீச்சில் முதல் தர கிரிக்கெட்டில் 87 விக்கெட்டுகளையும் லிஸ்ட் ஏ ஒருநாள் கிரிக்கெட்டில் 37 விக்கெட்டுகளையும் டி20 போட்டிகளில் 28 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.



Read More

Previous Post

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு பதிவு செய்யப்படவில்லை ஏன்? – மோகன் பாகவத் விளக்கம்

Next Post

டிஜிட்டல் தங்கம் முதலீடு அபாயமா? – செபி எச்சரிக்கைக்கு சோம. வள்ளியப்பன் விளக்கம் | வணிகம்

Next Post
டிஜிட்டல் தங்கம் முதலீடு அபாயமா? – செபி எச்சரிக்கைக்கு சோம. வள்ளியப்பன் விளக்கம் | வணிகம்

டிஜிட்டல் தங்கம் முதலீடு அபாயமா? – செபி எச்சரிக்கைக்கு சோம. வள்ளியப்பன் விளக்கம் | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin