Last Updated:
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க குடிமக்களுக்கு 2,000 டாலர் வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றப்பின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார். இதில் முக்கியமான நடவடிக்கையாகவும், உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியதும் வரி விதிப்பு.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விதித்த வரி அந்நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சில நாடுகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் வரியைக் குறைத்துக்கொண்டன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சமூகவலைதளப் பக்கத்தில், “வரிகளுக்கு எதிரானவர்கள் முட்டாள்கள்” என்றும், ”அமெரிக்கக் குடிமக்களுக்கு ஒவ்வொருவருக்கும் 2,000 அமெரிக்க டாலர் வழங்கப்படும்” என்றும் அறிவித்துள்ளார். 2,000 அமெரிக்க டாலர் என்பது இந்திய ரூபாயில், 1,77,279 என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “வரிகளுக்கு எதிரானவர்கள் முட்டாள்கள். நாம் தற்போது உலகிலேயே பணக்கார, மதிப்புக்குரிய நாடு. அதிலும், கிட்டத்தட்ட பணவீக்கமே இல்லாமல், பெரும் அளவில் பங்குச் சந்தை மதிப்பீடு கொண்ட நாடாக இருக்கிறோம். அமெரிக்கக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 2,000 டாலர் வழங்கப்படும் (இந்திய மதிப்பில் ரூ. 1,77,279). அதேசமயம், இந்த நிதி அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறுபவர்களுக்குக் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
November 09, 2025 8:22 PM IST


