ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பல கஷ்டங்களையும் சவால்களையும் சந்தித்தவர்களிடம் எப்போதுமே மன உறுதியும் எத்தனை தோல்விகள் அடைந்தாலும் அதிலிருந்து மீண்டெழும் சக்தியும் இருக்கும். இவர்களை போன்ற நபர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். அப்படியொருவரைப் பற்றியே இன்று பார்க்கப் போகிறோம்.
இந்தியாவின் முன்னனி தொழில்முனைவோர்களில் ஒருவரும் பிரபல பெண் தொழிலதிபர்களில் ஒருவருமான கல்பனா சரோஜின் வாழ்க்கை கதை பலருக்கு உத்வேகம் அளிக்க கூடியது. இன்று இவர் Kamani Tubes என்ற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இவ்வளவு பெரிய இடத்தை அடைய அவர் மிகப்பெரிய துன்பங்களை சந்தித்துள்ளார். ஆனால் தன்னுடைய பாதையில் எத்தனை தடைகள் வந்தாலும் அவர் சோர்ந்துவிடவில்லை. துணிந்து எதிர்த்து போராடினார். மகராஷ்ட்ராவைச் சேர்ந்த போலீஸ் காண்ஸ்டபிளின் மகளான கல்பனா, 12 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டார். இதனால் அவரது பள்ளிப்படிப்பு பாதியிலேயே நின்று போனது.
இவருடைய கணவரின் குடும்பம் மும்பையில் உள்ள சேரியில் வசித்து வந்தது. திருமணத்திற்குப் பிறகு கல்பனாவும் அங்கு வசிக்கத் தொடங்கினார். கணவர் வீட்டில் இவருக்கு பல கொடுமைகள் நிகழ்த்தப்பட்டது. சந்தோஷமாக படிக்க வேண்டிய வயதில் மாமியார் கொடுமைக்கு ஆளானார். ஒருவழியாக இந்தக் கொடுமையிலிருந்து கல்பனாவை அவரது தந்தை மீட்டெடுத்தார்.
இதற்கிடையில் இவரை ஒட்டுமொத்த கிராமமும் ஒதுக்கி வைத்தது. இதில் வேதனையடைந்த கல்பனா, அந்த இளம் வயதில் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடையவே, யாருடைய உதவியும் இல்லாமல் சொந்தக்காலில் வாழ முடிவு செய்த கல்பனா, தன்னுடைய 16-வது வயதில் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வருமானம் ஈட்ட தொடங்கினார். இதற்காக மும்பை சென்று அங்கு அரசாங்க துணி நெய்யும் ஆலையில் இரண்டு ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தார். இதன் மூலம் அவருக்கு மாதம்தோறும் ரூ.50 வருமானம் கிடைத்தது.
இதில் கிடைத்த அணுபவத்தைக் கொண்டு சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தார் கல்பனா. 1990-களின் நடுப்பகுதியில் kamani tubes என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அதன்பின்னர் திரைப்படத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு கேஎஸ் ஃபிலிம் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தெலுங்கு, ஆங்கிலம், இந்தி படங்களை வெளியிட்டார். இதோடு நிற்காமல் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இறங்கினார். இத்தனைக்குப் பிறகும் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை கல்பனாவை விடவில்லை. தன்னிடமிருந்த ரூ.50,000 பணத்தை முதலீடாக போட்டு தானேவில் விலை குறைவான மரச்சாமான்களை விற்பனை செய்தார்.
Also read |
பார்க்க தான் சிம்பிள்.. ஆனால் ரூ.26,690 கோடிக்கு அதிபதியின் மகள்.. யார் இவர்?
கல்பனாவின் கடுமையான உழைப்பும், மன உறுதியும் சோர்வடையாத அர்ப்பணிப்பும் அவரது நிறுவனத்தை லாபகரமாக மாற்றியது. இன்று kamani tubes நிறுவனத்தின் வருவாய் மட்டுமே ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும். ஒரு காலத்தில் பல கஷ்டங்களை அணுபவித்த கல்பனாவின் இன்றைய சொத்து மதிப்பு எவ்வுளவு தெரியுமா? சுமார் ரூ.917 கோடி.
.
&w=750&resize=750,375&ssl=1)
