
மத்திய கிழக்கில் மறைந்திருக்கும் இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழுபேர் அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளனர் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு எதிரான ‘முழு நாடும் ஒன்றாக’ எனும் வேலைத்திட்டம், கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

