சிங்கப்பூர்: போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக வெளிநாட்டு ஓட்டுநர் ஒருவர் மீது நேற்று முன்தினம் (நவம்பர் 7) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அவர் சட்டத்திற்கு புறம்பான எல்லை தாண்டிய வாடகை பயணச் சேவை வழங்கியதாகவும், அதற்கு புகார் பதிவு செய்யாமல் இருக்க அதிகாரிக்கு S$50 லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த அக்.23 அன்று நடந்த இந்த சம்பவத்தில் வெளிநாட்டு ஓட்டுனரான 44 வயதுமிக்க லீ கெஹ் மெங் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
லீ கொடுத்த லஞ்சத்தை நிராகரித்த அதிகாரி, பின்னர் ஊழல் தடுப்பு புலனாய்வுப் பிரிவுக்கு இது குறித்து தகவல் அளித்தார்.
மலேசியாவை சேர்ந்த அவர், சிங்கப்பூர்-மலேசியா இடையே சட்டத்திற்கு புறம்பான எல்லை தாண்டிய வாடகை பயணச் சேவை வழங்கியபோது அதிகாரியிடம் பிடிபட்டு லஞ்சம் கொடுக்க முயன்றார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லீ தண்டனைக்குரிய குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு S$100,000 வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
TOTO லாட்டரி: 1 கொடியே 20 லட்சம் சிங்கப்பூர் டாலர் பரிசு… வெளியான முடிவுகள் – 28 வெற்றி பங்குகள்

