Last Updated:
விசா கோருபவர்களால் தங்களுக்கு உள்ள உடல் உபாதைகளுக்கான மருத்துவ செலவை அவர்களே ஏற்றுக்கொள்ளும் வகையில் பொருளாதார நிலை இருக்கிறதா என்பதை ஆராய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீரிழிவு, இதய நோய் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசா வழங்காதவாறு, புதிய விதிமுறைகளை அமெரிக்க அரசு கொண்டு வர உள்ளது.
அமெரிக்க அதிபராக 2ஆவது முறையாக பொறுப்பேற்ற பிறகு, அந்நாட்டுக்கு விசா வாங்குவதை டொனால்ட் டிரம்ப் கடுமையாக்கி வருகிறார். அந்த வகையில், நீரிழிவு நோய், அதிக எடை, இருதய நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய் உள்ளவர்கள் அமெரிக்காவில் வாழ விசா கோரி விண்ணப்பித்தால் அதனை நிராகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதே போல பரவும் நோய்கள், ஆஸ்துமா, தூக்கப் பிரச்னை, தடுப்பூசி போடாதவர்கள், மனநோய் உள்ளவர்களுக்கு விசா நிராகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க தூதரகங்களுக்கு அமெரிக்க அரசு பரிந்துரை வழங்கி உள்ளது. இது போன்ற நோய் உள்ளவர்கள் அமெரிக்காவுக்கு வரும் பட்சத்தில் அவர்களுக்கான மருத்துவ செலவு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விசா கோருபவர்களால் தங்களுக்கு உள்ள உடல் உபாதைகளுக்கான மருத்துவ செலவை அவர்களே ஏற்றுக்கொள்ளும் வகையில் பொருளாதார நிலை இருக்கிறதா என்பதை ஆராயவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
November 09, 2025 7:55 AM IST
இந்த நோயெல்லாம் இருந்தா இனி அமெரிக்கா போக முடியாதாம்.. அமெரிக்காவின் புதிய விதிமுறைகள்!


