• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘டிஜிட்டல் கோல்டு’-ல் முதலீடு செய்ய போறீங்களா? – உயரும் தங்கம் விலைக்கு மத்தியில் செபி விடுத்த எச்சரிக்கை! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
‘டிஜிட்டல் கோல்டு’-ல் முதலீடு செய்ய போறீங்களா? – உயரும் தங்கம் விலைக்கு மத்தியில் செபி விடுத்த எச்சரிக்கை! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 09, 2025 7:39 AM IST

ஆன்லைன் மூலம் டிஜிட்டல் தங்கம் சேமிப்பில் ஈடுபடும் முதலீட்டாளர்களை இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி எச்சரித்துள்ளது.

News18
News18

அங்கீகாரம் இல்லாத தளங்கள் மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வரலாற்றில் இல்லாத வகையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், அமெரிக்க பங்குச் சந்தையின் தாக்கம் மற்றும் தங்கத்தில் அதிகளவிலான முதலீடு காரணமாக இந்த விலையேற்றம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் மொத்தமாக பணம் கொடுத்து தங்கம் வாங்குவது எளிதானதல்ல என்கிற நிலையில், ஆன்லைன் தளங்களில் டிஜிட்டல் தங்கம் அல்லது இ-தங்கம் போன்ற முதலீடு திட்டங்களை மக்கள் நாடி வருகின்றனர். டிஜிட்டல் கோல்டு என்பவை டிஜிட்டல் வடிவில் இருக்கும் தங்கம் என குறிப்பிடலாம். அதாவது, நமக்கு தேவைப்படும் போது இதனை விற்று பணமாக்கலாம் அல்லது தங்கமாக மாற்றி பெற்றுக்கொள்ளலாம்.

இதன் காரணமாக மொபைல் செயலி மூலம் 10 ரூபாய் முதல் பல ஆயிரங்கள் வரை தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி பல நகைக்கடைகளில் 11 மாதங்கள் வரை தங்கத்தில் பணம் முதலீடு செய்து 12ஆவது மாதத்தில் தங்க நாணயமாகவோ அல்லது ஆபரணமாகவோ பெறும் திட்டங்களில் முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில், ஆன்லைன் மூலம் டிஜிட்டல் தங்கம் சேமிப்பில் ஈடுபடும் முதலீட்டாளர்களை இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி எச்சரித்துள்ளது. இதுபோன்ற டிஜிட்டல் தங்கத்தை வாங்குவோருக்கு எந்தவித சட்ட பாதுகாப்பும் இல்லை என செபி எச்சரித்துள்ளது.

கட்டுப்பாடற்ற ஆன்லைன் தளங்களால் வழங்கப்படும் “டிஜிட்டல் தங்கம்” அல்லது “இ-தங்கம்” தயாரிப்புகளில் முதலீடு செய்வது பாதுகாப்பற்றது எனவும் செபி கூறியுள்ளது. தங்கப் பத்திரங்கள் அல்லது சரக்கு வர்த்தகப் பொருட்களின் கீழ் டிஜிட்டல் தங்கம் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், இவை செபி அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வராது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், Gold ETF மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் வழியான தங்க முதலீடுகள் செபிக்கு கட்டுப்பட்டவை மற்றும் பாதுகாப்பானவை என இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தெரிவித்துள்ளது. நாட்டில் ஆன்லைன் தங்க முதலீட்டில் மக்களின் கவனம் திரும்பியுள்ள நிலையில், அதில் கவனமாக இருக்க வேண்டும் என செபி மக்களை எச்சரித்திருக்கிறது.

அங்கீகரிக்கப்படாத முறையில் நிறுவனங்கள் மற்றும் செயலிகள் மூலம் வாங்கப்படும் டிஜிட்டல் தங்கம் பாதுகாப்பானது இல்லை எனவும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் செபி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

November 09, 2025 7:35 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

‘டிஜிட்டல் கோல்டு’-ல் முதலீடு செய்ய போறீங்களா? – உயரும் தங்கம் விலைக்கு மத்தியில் செபி விடுத்த எச்சரிக்கை!

Read More

Previous Post

பிஹாரில் இருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்: அமித் ஷா | Bihar polls: Amit Shah targets Rahul Gandhi, promises to expel infiltrators from Seemanchal

Next Post

இந்த நோயெல்லாம் இருந்தா இனி அமெரிக்கா போக முடியாதாம்.. அமெரிக்காவின் புதிய விதிமுறைகள்! | உலகம்

Next Post
இந்த நோயெல்லாம் இருந்தா இனி அமெரிக்கா போக முடியாதாம்.. அமெரிக்காவின் புதிய விதிமுறைகள்! | உலகம்

இந்த நோயெல்லாம் இருந்தா இனி அமெரிக்கா போக முடியாதாம்.. அமெரிக்காவின் புதிய விதிமுறைகள்! | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin