Last Updated:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 3 போட்டிகளில் 202 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரோஹித் சர்மா கூடுதலாக 5 கிலோ எடையை குறைத்து இன்னும் ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறியுள்ளார். இது தொடர்பான ஃபோட்டோ இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் உடல் எடை அதிகரித்திருந்த ரோஹித் சர்மா பின்னர் அதிரடியாக எடையை குறைக்க ஆரம்பித்தார். ஆஸ்திரேலியா தொடருக்கு தயாரான அவர் சுமார் 15 கிலோ வரை எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்தில் காட்சியளித்தார்.
எதிர்பார்த்ததை போன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 3 போட்டிகளில் 202 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
அடுத்ததாக இந்தியாவில் நடைபெறவிருக்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார் ரோஹித் சர்மா.
இது தொடர்பான ஃபோட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்துள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் அதற்காக விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் தங்களது ஃபிட்னஸை பராமரித்து வருகின்றனர்.
November 08, 2025 9:18 PM IST


