• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

444 நாட்கள்… ரூ.9,50,000 முதலீடு செய்தால் ரிட்டர்ன் தொகை இவ்வளவு கிடைக்குமா..? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 8, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
444 நாட்கள்… ரூ.9,50,000 முதலீடு செய்தால் ரிட்டர்ன் தொகை இவ்வளவு கிடைக்குமா..? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இது 60 வயதிற்குட்பட்டவர்கள், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஃபிக்ஸட் டெபாசிட்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்திற்கான சிறந்த தேர்வாக மக்கள் மத்தியில் இருந்து வருகின்றன. எனினும் ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் பிற விருப்பங்கள் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது.

எனவே முதலீட்டாளர்களை ஃபிக்ஸட் டெபாசிட் நோக்கி ஈர்ப்பதற்காக, வங்கிகள் வழக்கத்தை விட அதிக வட்டி விகிதங்களுடன் கூடிய சில திட்டங்களை வழங்குகின்றன. தற்போது 444 நாள் ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்குபவர்களில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பேங்க் ஆஃப் பரோடா (BoB), பஞ்சாப் & சிந்து வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் (IOB), கனரா பேங்க் மற்றும் பல உள்ளன. நீங்கள் இந்த சிறப்பு திட்டத்தில் ரூ.9.5 லட்சம் முதலீடு செய்தால் உங்கள் முதலீட்டின் மீது சிறந்த வட்டி வருமானத்தை எந்த வங்கி தரும் என்பதை இங்கே பார்க்கலாம்.

1. SBI-யின் 444 நாட்கள் FD-ன் சமீபத்திய வட்டி விகிதம்:

பாரத ஸ்டேட் வங்கியானது (SBI) அதன் அம்ரித் விருஷ்டி ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட்டின் கீழ் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு சுமார் 6.6 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

2. பஞ்சாப் & சிந்து வங்கியின் 444 நாட்கள் FD-ன் சமீபத்திய வட்டி விகிதம்:

இந்த வங்கி இப்போது அதன் 444 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் பொது வாடிக்கையாளர்களுக்கு (60 வயதிற்குட்பட்டவர்களுக்கு) 6.6 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

3. இந்தியன் ஓவர்சீஸ் & இந்தியன் வங்கிகளின் 444 நாட்கள் FD-ன் சமீபத்திய வட்டி விகிதம்:

மேற்காணும் வங்கிகள் இரண்டுமே பொது குடிமக்களுக்கு இந்த சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டின் கீழ் 6.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

4. கனரா வங்கி 444 நாள் FD-ன் சமீபத்திய வட்டி விகிதம்:

கனரா வங்கி அதன் 444 நாள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 6.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

5. பேங்க் ஆஃப் பரோடா 444 நாள் FD-ன் சமீபத்திய வட்டி விகிதம்:

எஸ்பிஐ-யை போலவே, பேங்க் ஆஃப் பரோடாவும் (BoB) பொது வாடிக்கையாளர்களுக்கான 444 நாள் சிறப்பு எஃப்.டி-க்கு 6.6 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

ரூ.9,50,000 முதலீட்டில் இதில் சிறந்த வட்டி?

SBI, BoB மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி ஆகிய மூன்று வங்கிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வட்டி விகிதங்களை வழங்குவதால், இவற்றின் 444 நாள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ரூ.9,50,000 முதலீடு செய்வதால் கிடைக்கும் மெச்சூரிட்டி தொகை சுமார் ரூ.10,28,741.78-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கிடைக்கும் மொத்த வட்டி ரூ.78,741.78-ஆக இருக்கும்.

அதே நேரம் இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இரண்டும் ஒரே வட்டி விகிதத்தை வழங்குவதால், ஒரு பொது வாடிக்கையாளர் ரூ.9,50,000 முதலீடு செய்தால், மெச்சுரிட்டி பீரியட் முடிவடைந்த பிறகு கிடைக்கும் மொத்த தொகை ரூ.10,29,973.45 ஆகும். அதாவது கிடைக்கும் மொத்த வட்டி ரூ.79,973.45-ஆக இருக்கும். கனரா வங்கியில்: ரூ.9,50,000 முதலீடு செய்யும் 60 வயதிற்குட்பட்ட ஒரு பொது குடிமகன் ரூ.10,27,511.28 மெச்சூரிட்டி தொகையை பெறலாம், அதாவது சுமார் ரூ.77,511.28 வட்டியை பெறலாம்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 08, 2025 7:22 PM IST

Read More

Previous Post

ஆஸ்திரேலியாவுடன் கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா | team india to play australia in last t20i match in brisbane gaba

Next Post

ரஷ்ய எண்ணெய் தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு: ட்ரம்ப் அறிவிப்பு | US Grants Hungary Exemption On Russian Oil Sanctions

Next Post
ரஷ்ய எண்ணெய் தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு: ட்ரம்ப் அறிவிப்பு | US Grants Hungary Exemption On Russian Oil Sanctions

ரஷ்ய எண்ணெய் தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு: ட்ரம்ப் அறிவிப்பு | US Grants Hungary Exemption On Russian Oil Sanctions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin