• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

19 நாட்களுக்குப் பின் கிடைத்த உடல்.. ரஷ்யாவில் இந்திய மாணவருக்கு நடந்தது என்ன? | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 8, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
19 நாட்களுக்குப் பின் கிடைத்த உடல்.. ரஷ்யாவில் இந்திய மாணவருக்கு நடந்தது என்ன? | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 08, 2025 3:39 PM IST

ரஷ்யாவில் பாஷ்கிர் மருத்துவப் பல்கலைக்கழக மாணவர் அஜித் சிங் சவுத்ரி 19 நாட்கள் காணாமல் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rapid Read
அஜித் சிங் சவுத்ரி
அஜித் சிங் சவுத்ரி

ரஷ்யாவில் காணாமல்போன இந்திய மாணவர் 19 நாட்களுக்குப் பின் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாணவர்கள் பலர் ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகின்றனர். இதில், ராஜஸ்தானில் உள்ள கபன்வாடா கிராமத்தைச் சேர்ந்த அஜித் சிங் சவுத்ரி என்பவர் ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ். படிக்க சென்றார். இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு பாஷ்கிரில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த அஜித் சிங், கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியே சென்றுள்ளார்.

காலை 11 மணியளவில் பால் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவர், நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் காணவில்லை என்பதால், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால், இரண்டு வாரங்களுக்கு மேல் எந்தவொரு துப்பும் கிடைக்காதால் வழக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ளை நதியை ஒட்டிய அணையில் அஜித் சிங் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அருகே அவரின் செல்போன் மற்றும் காலணிகளும் கிடைத்துள்ளன. காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு 19 நாட்களுக்குப் பின் இந்திய மாணவரின் உடல் கிடைத்துள்ளதால், அவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தனது மகனை எப்படியாவது மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்ற வேட்கையில், அஜித் சிங்கின் பெற்றோர் கடன் வாங்கி அவரை ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்க அனுப்பியுள்ளனர்.

மருத்துவம் படித்து முடித்துவிட்டு தங்களது குடும்பத்தை கவனித்துக் கொள்வார் என்ற பெரும் கனவோடு இருந்த பெற்றோருக்கு, அஜித் சிங்கின் மரண செய்தி தலையில் இடியாய் விழுந்துள்ளது. மருத்துவ மாணவரின் உடலை இந்தியா கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய நிலையில், மாணவரின் மரணம் தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை என கூறப்படுகிறது. ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்ம் என இந்திய தூதரகம் உறுதியளித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 08, 2025 3:39 PM IST

Read More

Previous Post

ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர்: ஹரிகிருஷ்ணா, எரிகைசி வெற்றி | fide world cup chess harikrishna erigaisi won

Next Post

வெளிநாட்டவருக்கு விசா வழங்கும் விவகாரம்: அமெரிக்கா கடும் கெடுபிடி | Makkal Osai

Next Post
வெளிநாட்டவருக்கு விசா வழங்கும் விவகாரம்: அமெரிக்கா கடும் கெடுபிடி | Makkal Osai

வெளிநாட்டவருக்கு விசா வழங்கும் விவகாரம்: அமெரிக்கா கடும் கெடுபிடி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin