எனவே முதலீட்டாளர்களை ஃபிக்ஸட் டெபாசிட் நோக்கி ஈர்ப்பதற்காக, வங்கிகள் வழக்கத்தை விட அதிக வட்டி விகிதங்களுடன் கூடிய சில திட்டங்களை வழங்குகின்றன. தற்போது 444 நாள் ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்குபவர்களில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பேங்க் ஆஃப் பரோடா (BoB), பஞ்சாப் & சிந்து வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் (IOB), கனரா பேங்க் மற்றும் பல உள்ளன. நீங்கள் இந்த சிறப்பு திட்டத்தில் ரூ.9.5 லட்சம் முதலீடு செய்தால் உங்கள் முதலீட்டின் மீது சிறந்த வட்டி வருமானத்தை எந்த வங்கி தரும் என்பதை இங்கே பார்க்கலாம்.
பாரத ஸ்டேட் வங்கியானது (SBI) அதன் அம்ரித் விருஷ்டி ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட்டின் கீழ் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு சுமார் 6.6 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இந்த வங்கி இப்போது அதன் 444 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் பொது வாடிக்கையாளர்களுக்கு (60 வயதிற்குட்பட்டவர்களுக்கு) 6.6 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மேற்காணும் வங்கிகள் இரண்டுமே பொது குடிமக்களுக்கு இந்த சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டின் கீழ் 6.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
கனரா வங்கி அதன் 444 நாள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 6.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
எஸ்பிஐ-யை போலவே, பேங்க் ஆஃப் பரோடாவும் (BoB) பொது வாடிக்கையாளர்களுக்கான 444 நாள் சிறப்பு எஃப்.டி-க்கு 6.6 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
SBI, BoB மற்றும் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஆகிய மூன்று வங்கிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வட்டி விகிதங்களை வழங்குவதால், இவற்றின் 444 நாள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ரூ.9,50,000 முதலீடு செய்வதால் கிடைக்கும் மெச்சூரிட்டி தொகை சுமார் ரூ.10,28,741.78-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கிடைக்கும் மொத்த வட்டி ரூ.78,741.78-ஆக இருக்கும்.
அதே நேரம், இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இரண்டும் ஒரே வட்டி விகிதத்தை வழங்குவதால், ஒரு பொது வாடிக்கையாளர் ரூ.9,50,000 முதலீடு செய்தால், மெச்சுரிட்டி பீரியட் முடிவடைந்த பிறகு கிடைக்கும் மொத்த தொகை ரூ.10,29,973.45 ஆகும். அதாவது கிடைக்கும் மொத்த வட்டி ரூ.79,973.45-ஆக இருக்கும். கனரா வங்கியில் ரூ.9,50,000 முதலீடு செய்யும் 60 வயதிற்குட்பட்ட ஒரு பொது குடிமகன் ரூ.10,27,511.28 மெச்சூரிட்டி தொகையை பெறலாம், அதாவது சுமார் ரூ.77,511.28 வட்டியை பெறலாம்.
November 08, 2025 7:33 AM IST
444 நாட்கள் ஸ்பெஷல் பிக்ஸட் டெபாசிட்.. ரூ.9,50,000 முதலீட்டிற்கு எந்த பொதுத்துறை வங்கி அதிக வட்டி தருகிறது?

