Last Updated:
ஏறக்குறைய 3 லட்சம் ரசிகர்கள் நேரில் சென்று போட்டியை கண்டுகளித்துள்ளனர். இதற்கு முன்பு எந்த உலகக் கோப்பை தொடருக்கும் இவ்வளவு ரசிகர்கள் வந்ததில்லை.
மகளிர் கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பை தொடர்ந்து, 2029 ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் 10 அணிகள் விளையாடும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
13ஆவது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஏறக்குறைய 3 லட்சம் ரசிகர்கள் நேரில் சென்று போட்டியை கண்டுகளித்துள்ளனர். இதற்கு முன்பு எந்த உலகக் கோப்பை தொடருக்கும் இவ்வளவு ரசிகர்கள் வந்ததில்லை. இறுதி ஆட்டத்தை மட்டும் 39 ஆயிரத்து 555 பேர் நேரில் ரசித்துள்ளனர்.
அதே போல, 2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு நிகரான டிஜிட்டல் பார்வைகளை, மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியும் பெற்றுள்ளது. இந்தியா கோப்பை வென்ற இந்த இரு போட்டிகளும் ஹாட்ஸ்டாரில் மொத்தமாக 18 கோடியே 50 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளன.
மகளிர் கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பையடுத்து, அடுத்த உலகக் கோப்பையில் அணிகளின் எண்ணிக்கையை 8இல் இருந்து 10 ஆக உயர்த்துவது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதன்படி 2029-ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் 10 அணிகள் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
November 08, 2025 8:19 AM IST


