ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த தொற்று மோசமடைந்து சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் பாம்புகளில் இருக்கும் கோடுகள் போன்று தோன்றுகிறது. கால்களில் வீக்கம், தொடர் வாந்தி, குமட்டல் ஆகியவை ஏற்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அவரை பரிசோதனை செய்த தோல் மருத்துவர், அந்தப் பெண்ணின் உடலில் கார்டிசோல் ஹார்மோனின் அளவு மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்து இருக்கின்றார்.
அவரது உடல் அத்தியாவசிய ஹார்மோன்களை போதுமான அளவு உற்பத்தி செய்யாததால் “செகண்டரி அட்ரினோகார்டிகல் இன்சஃபிஷியன்சி’ (Secondary Adrenocortical Insufficiency) என்ற பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.

