அதில் பேசியவர், “1973-ல் இந்திய மகளிர் கிரிக்கெட் வாரியம் தொடங்கப்பட்டது. 2006-ல் தான் பி.சி.சி.ஐ.யின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதுவரை, வீராங்கனைகள் தங்களது ஆர்வத்தாலும், அர்ப்பணிப்பாலும் மட்டுமே விளையாடினர். நியூசிலாந்து பயணத்தின்போது NRI வீடுகளில் தங்கியிருந்தோம். இதையெல்லாம் அறிந்த நடிகை மந்திரா பேடி, புகழ்பெற்ற வைர விளம்பரத்தில் நடித்து, அந்தப் பணத்தை எங்களுக்குக் கொடுத்தார். அந்தப் பணத்தை வைத்துதான் அடுத்து இங்கிலாந்து சென்றோம். யாருமே பார்க்காத காலக்கட்டத்தில் இந்த அணிக்கு அடித்தளமாக இருந்தவர் மந்திரா” என்று நியூதன் கவாஸ்கர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.


