அரச ஊழியர்களின் சம்பளத்தை 3 கட்டங்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மக்களுக்கு எதிராக எவரேனும் தவறு இழைத்திருப்பார்களாயின், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விடயத்தில் யாருக்கும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

