Last Updated:
Bihar Deputy CM Vijaykumar Sinha | மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய துணை முதலமைச்சர், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
தனது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களின் மார்பில் புல்டோசரை ஏற்றுவோம் என்று பிகார் துணை முதலமைசர் விஜயகுமார் சின்ஹா பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
பிகாரில் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. லக்கிசராய் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிகார் துணை முதலமைச்சர் விஜயகுமார் சின்ஹா, வாக்குச்சாவடிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஹோரியாரி கிராமத்திற்கு சென்றபோது ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சின்ஹாவின் காரை அங்கிருந்தவர்கள் சூழ்ந்தனர். அப்போது வாகனத்தின் மீது சிலர் காலணிகள் மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது. உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய துணை முதலமைச்சர், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய விஜயகுமார் சின்ஹா, தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர உள்ளததால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் பீதியடைந்துள்ளதாகக் கூறினார். தன் வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்களின் மார்பில் புல்டோசர் ஏற்றப்படும் என்றும் மிரட்டல் விடுத்தார்.
November 07, 2025 10:26 AM IST


