Last Updated:
MS Dhoni | அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடுவார் என உறுதியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி விளையாடுவார் என சி.எஸ்.கே. அணியின் முதன்மை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிபடக் கூறியுள்ளார்.
கடந்த சீசனில், ஐ.பி.எல். வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
இதில் தொடக்க கட்டத்தில் சில போட்டிகளில் ஆடிய சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதனால் சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
இதனிடையே, கடந்த இரண்டு சீசன்களாக ஐபிஎல்லில் இருந்து தோனி ஓய்வு பெறுவது குறித்து தொடர்ந்து ஊகங்கள் எழுந்தன. ஓய்வு குறித்து முடிவெடுப்பதற்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது என்று கடைசி போட்டியின் முடிவில் தோனி கூறியிருந்தார். தற்போது அடுத்த சீசன் நெருங்கும் வேளையில் தோனி ஓய்வு குறித்த கேள்விகள் எழத்தொடங்கி உள்ளன.
இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ ஆன காசி விஸ்வநாதன், ஐபிஎல்லில் இருந்து தோனி ஓய்வு பெறவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
November 07, 2025 8:51 AM IST


