• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிஹார் முதற்கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவு | Bihar’s voter turnout for Phase 1 assembly polls stands at 60.13 per cent till 5 pm

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பிஹார் முதற்கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவு | Bihar’s voter turnout for Phase 1 assembly polls stands at 60.13 per cent till 5 pm
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் நடைபெற்ற 18 மாவட்டங்களில் அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 67.32% வாக்குகள் பதிவாகி உள்ளன. தலைநகர் பாட்னாவில் 55.02% வாக்குகள் பதிவாகி உள்ளன.

கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 64.96% வாக்குகளும், முசாஃபர்பூர் மாவட்டத்தில் 64.63% வாக்குகளும் பதிவாகி உள்ளன. லக்கிசராய் மாவட்டத்தில் 62.76% வாக்குகளும், மதேபுரா மாவட்டத்தில் 65.74% வாக்குகளும் பதிவாகி உள்ளன. போஜ்பூர் மாவட்டத்தில் 53.24%, பக்ஸர் மாவட்டத்தில் 55.10%, தர்பங்காவில் 58.38%, காகாரியாவில் 60.65%, முங்கெரில் 54.90%, நாளந்தாவில் 57.58%, சஹார்சாவில் 62.65%, சமஸ்திபூரில் 66.65%, சரணில் 60.90%, ஷேக்புராவில் 52.36%, சிவானில் 57.41%, வைஷாலியில் 59.45% வாக்குகள் பதிவாகி உள்ளன.

விவிஐபிக்கள் போட்டியிடும் தொகுதிகளான ரகோபூரில் 64.01%, மஹூவாவில் 54.88%, அலிநகரில் 58.05%, தாராபூரில் 58.33%, லக்கிசராயில் 60.51%, சாப்ராவில் 56.32%, பன்கிபூரில் 40%, புல்வாரியில் 62.14%, ரகுநாத்பூரில் 51.18%, சிவணில் 57.38%, மொகாமாவில் 62.16% வாக்குகள் பதிவாகி உள்ளன.

முதற்கட்ட தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் மற்றும் மாநில துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா, 10-க்கும் மேற்பட்ட பாஜக மற்றும் ஜேடியு அமைச்சர்கள் களத்தில் இருந்தனர். இளம் நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் (பாஜக – அலிகஞ்ச் தொகுதி) மற்றும் போஜ்புரி சூப்பர் ஸ்டார்கள் கேசரி லால் யாதவ் (ஆர்ஜேடி – சாப்ரா தொகுதி) மற்றும் ரித்தேஷ் பாண்டே (ஜன் சுராஜ் கட்சி – கர்கஹார் தொகுதி) ஆகியோரும் முதல் கட்ட தேர்தலில் போட்டியிட்டார்கள்.

பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243-ல் 121 தொகு​தி​களில் இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெற்றது. இதற்காக பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, காங்கிரஸின் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. 18 மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய இந்த தொகுதிகளில் மொத்​தம் 122 பெண்​கள் உள்​ளிட்ட 1,314 வேட்​பாளர்​கள் போட்​டி​யிட்டனர். வாக்​காளர்​கள் எண்​ணிக்கை 3.75 கோடி. மொத்​தம் 45,341 வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

கடந்த 2020 தேர்​தலில், 121 -ல் மகா கூட்​டணி 61 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி (என்​டிஏ) 59 மற்​றும் லோக் ஜன சக்தி ஒரு தொகு​தி​யில் வெற்றி பெற்​றிருந்​தது. இந்த 121 தொகு​தி​களில் மெகா கூட்​ட​ணி​யின் தலை​மைக் கட்​சி​யான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) மட்​டும் 42 தொகு​தி​களில் வென்​றிருந்​தது. இக்​கூட்​ட​ணி​யின் இதர உறுப்​பினர்​களான காங்​கிரஸ் 8 மற்​றும் இடது​சா​ரி​கள் 11 தொகு​தி​களைப் பெற்​றன. அதே​போல், பாஜக 32 மற்​றும் ஜேடியு 23 தொகு​தி​களில் 2020 தேர்தலில் வெற்றி பெற்​றன என்பது நினைவுகூரத்தக்கது.



Read More

Previous Post

தாய்லாந்தில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் வெடித்த சர்ச்சை

Next Post

பாரிஸ் அருங்காட்சியக கொள்ளைக்கு ‘Password’ தான் காரணமா.. வெளியான அதிர்ச்சி தகவல்! | உலகம்

Next Post
பாரிஸ் அருங்காட்சியக கொள்ளைக்கு ‘Password’ தான் காரணமா.. வெளியான அதிர்ச்சி தகவல்! | உலகம்

பாரிஸ் அருங்காட்சியக கொள்ளைக்கு 'Password' தான் காரணமா.. வெளியான அதிர்ச்சி தகவல்! | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin