Last Updated:
தென்னாப்பிரிக்கா ஏ அணியின் விக்கெட் கீப்பர் ரூபின் ஹெர்மன் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்தி வீரரும், தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய பேட்ஸ்மேனுமான டெவால்ட் பிரேவிஸ் காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
இவற்றில் டெஸ்ட் தொடர் சமனில் முடிந்த நிலையில் டி20 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் வென்றது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இன்று 2ஆவது போட்டியும் சனிக்கிழமை அன்று 3 ஆவது போட்டியும் நடைபெறுகின்றன. இந்த நிலையில் காயம் காரணமாக இவ்விரு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரேவிஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக பிரேவிஸ் விளையாடுகிறார். நடைபெற்று முடிந்த சீசனில் பிரேவிஸின் பேட்டிங் சென்னை அணியின் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
பிரேவிஸிற்கு பதிலாக தென்னாப்பிரிக்கா ஏ அணியின் விக்கெட் கீப்பர் ரூபின் ஹெர்மன் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். 28 வயதாகும் அவர் தென்னாப்பிரிக்கா அணிக்காக 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ஒருநாள் போட்டித் தொடரில் அறிமுகம் ஆகிறார்.
November 06, 2025 4:14 PM IST


