Last Updated:
கோட்டயத்தில் வாக்காளர் பட்டியல் பணியில் சென்ற மெர்சி ஜோசப்பை வீட்டின் நாய் கடித்ததால் முகம் கழுத்தில் காயம் ஏற்பட்டது.
கேரள மாநிலம், கோட்டயத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை மேற்கொள்ளச் சென்ற அதிகாரி மெர்சி ஜோசப்பை வீட்டின் வளர்ப்பு நாய் கடித்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது.
இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்டித்து பேரணி நடத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினார்.
இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணியைத் துவக்கியுள்ளது. இதற்காக பல ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக வாக்காளர்களுக்கு பூர்த்தி செய்ய வேண்டிய படிவத்தை இந்த வாக்குச் சாவடி அதிகாரிகள் ஒவ்வொரு வீடாகச் சென்று வழங்கிவருகின்றனர்.
#WATCH | Kerala: A BLO (Booth Level Officer) suffered injuries on her face and neck after she was allegedly attacked by a pet dog when she visited a house in Kottayam to give out Enumeration Forms as a part of SIR (Special Intensive Revision). She claims that the house owner… pic.twitter.com/SBguCAv3aJ
— ANI (@ANI) November 6, 2025
அந்த வகையில், கேரளா மாநிலம், கோட்டயத்தில் வாக்குச் சாவடி அதிகாரி மெர்சி ஜோசப் என்பவர் அவரது வாக்குச் சாவடி உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், கோட்டயத்தில் ஒரு வாக்காளர் வீட்டிற்கு படிவத்தைக் கொடுக்க வாக்குச் சாவடி அதிகாரி மெர்சி ஜோசப் சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் நாய், மெர்சி ஜோசப் முகம் மற்றும் கழுத்தில் கடித்துள்ளது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், தான் அந்த வீட்டிற்குச் சென்றபோது, வீட்டின் உரிமையாளர் தான் வளர்க்கும் நாயை ஏவிவிட்டு தன்னைக் கடிக்க வைத்ததாக பாதிக்கப்பட்ட வாக்குச் சாவடி அதிகாரி மெர்சி ஜோசப் தெரிவித்துள்ளார்.
November 06, 2025 3:51 PM IST


