சிங்கப்பூரில் கடமையைச் செய்யாமல் தவறிழைக்கும் நிறுவன இயக்குநர்களுக்கு இனி அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்படலாம்.
இதற்கு முன்னர் S$5000 அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் இனி அதிகபட்சமாக S$20000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
சட்டவிரோத பிராத்தல் விடுதி நடத்திய பெண்: புகார் கொடுத்த ஊழியர்
இந்த புதிய சட்டத் திருத்த மசோதா நேற்று நவ.5 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த புதிய திருத்தம் நல்ல பயனளிக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதேபோல, மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கும் கட்டாய பிரம்படி பிடிக்கப்படும் என்ற திருத்த சட்டமும் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது குறிப்பிடப்பட்டது.
குற்றவியல் சட்டம் திருத்த மசோதாவின் கீழ், மோசடி செய்பவர்கள் மற்றும் மோசடி கும்பல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்பவர்கள் அல்லது உறுப்பினர்களுக்கு 6 முதல் 24 பிரம்படிகள் வரை விதிக்கப்படும்.
லாரிக்குள் இறந்த நிலையில் கிடந்த ஊழியர் – வேலைக்குச் செல்ல இருந்தவர் சடலமாக கிடந்த சோகம்

