வெளியில் மசாஜ் பார்லர் போன்று காட்டிக்கொண்டு உள்ளே சட்டவிரோத பிராத்தல் விடுதி நடத்திய பெண்ணுக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இது குறித்து அந்த விடுதியில் இருந்த விலைமாது ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார்.
கார்பென்டர் ஸ்ட்ரீட்டில் உள்ள அந்த விடுதியில் காவல்துறையினர் சோதனை செய்தபோது, வாடிக்கையாளருடன் மோசமாக ஆடையுடன் இருந்த விலைமாது ஒருவரை அவர்கள் கண்டனர்.
இதனை அடுத்து, 44 வயதான மோ சூகுய் என்ற அந்த பெண் மீது மூன்று குற்றச்சாட்டுககள் சுமத்தப்பட்டது.
தாம் அங்கு காசாளராக பணிபுரிந்ததாகவும், மேலும் நான்கு பெண்களை மசாஜ் செய்பவர்களாக வேலைக்கு அமர்த்தியதாகவும் மோ கூறினார்.
ஆனால் அவர்கள் தனக்குத் தெரியாமல் பாலியல் சேவைகளை வழங்கியதாகவும் மோ வாதாடினார்.
புகார் அளித்த பெண்மணி அந்த விடுதியில் விலைமாதுவாக சுமார் ஒரு மாதம் பணியாற்றியதாகவும், மூன்று நாட்களுக்குப் பின்னர் அத்தகைய சேவைகளை வழங்க விரும்பவில்லை என்று மோவிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், வேலையை விட்டு போனால் S$4,500 செலுத்த வேண்டும் என மோ கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார், எனவே அந்தத் தொகையை ஈட்டுவதற்காக அவர் தொடர்ந்து சேவையை வழங்கியதாக கூறினார்.
புகார் அளித்த பெண்மணியின் வாதத்தில் உண்மையை கண்ட நீதிபதி மோவிற்கு தண்டனையை வழங்கினார்.
லாரிக்குள் இறந்த நிலையில் கிடந்த ஊழியர் – வேலைக்குச் செல்ல இருந்தவர் சடலமாக கிடந்த சோகம்

