• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மிட்செல் சாண்ட்னர் போராட்டம் வீண்: டி20-ல் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே.இ.தீவுகள் | west indies beats New Zealand in T20

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மிட்செல் சாண்ட்னர் போராட்டம் வீண்: டி20-ல் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே.இ.தீவுகள் | west indies beats New Zealand in T20
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆக்​லாந்து: நியூஸிலாந்து – மேற்கு இந்​தி​யத் தீவு​கள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ஆக்​லாந்​தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்​தில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 164 ரன்​கள் எடுத்​தது.

அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஷாய் ஹோப் 39 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 53 ரன்கள் விளாசினார். ரோவ்​மன் பவல் 33, ராஸ்​டன் சேஸ் 28, அலிக் அதானஸ் 16 ரன்​கள் சேர்த்​தனர்.

165 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 16.4 ஓவர்​களில் 107 ரன்​களுக்கு 9 விக்​கெட்​களை இழந்து தோல்​வி​யின் பிடி​யில் சிக்​கியது. டிம் ராபின்​சன் 27, டேவன் கான்வே 13, ரச்​சின் ரவீந்​திரா 21, மார்க் சாப்​மேன் 7, டேரில் மிட்​செல் 13, மைக்​கேல் பிரேஸ்​வெல் 1, ஜேம்ஸ் நீஷாம் 11, சாக் ஃபோல்க்ஸ் 1, கைல் ஜேமிசன் 2 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர்.

கைவசம் ஒரு விக்​கெட் மட்​டுமே இருந்த நிலை​யில் வெற்​றிக்கு 20 பந்​துகளில், 58 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் கேப்​டன் மிட்​செல் சாண்ட்​னர் போராடி​னார். மேத்யூ ஃபோர்டு வீசிய 18-வது ஓவரில் 4 பவுண்டரி​கள், ஒரு சிக்​ஸரை​யும் ஜேசன் ஹோல்​டர் வீசிய அடுத்த ஓவரின் முதல் 3 பந்​துகளை​யும் பவுண்​டரிக்கு விரட்டி அசத்​தி​னார் மிட்​செல் சாண்ட்​னர்.

அதிரடி​யாக விளை​யாடிய மிட்​செல் சாண்ட்​னர் 28 பந்​துகளில், சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 55 ரன்​கள் சேர்த்த போதி​லும் வெற்​றியை வசப்​படுத்த முடி​யாமல் போனது. முடி​வில் 20 ஓவர்​களில் நியூஸிலாந்து அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 157 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது. ரோமாரியோ ஷெப்​பர்டு வீசிய கடைசி ஓவரில் நியூஸிலாந்து அணி​யின் வெற்​றிக்கு 20 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. முதல் 2 பந்​துகளில் ரன்​கள் சேர்க்​காத சாண்ட்​னர், கடைசி 4 பந்​துகளில் 12 ரன்​கள் சேர்த்​தார். இதில் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரி அடங்​கும்.

ஒரு கட்​டத்​தில் நியூஸிலாந்து அணி 10 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 70 ரன்​கள் சேர்த்து வலு​வாகவே இருந்​தது. ஆனால் மேற்கொண்டு 37 ரன்​களை எடுப்​ப​தற்​குள் 7 விக்​கெட்​களை கொத்​தாக தாரை​வார்த்​தது. இதுவே அந்த அணி​யின் வீழ்ச்​சிக்கு முக்​கிய காரண​மாக அமைந்​தது.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி சார்​பில் ஜெய்​டன் சீல்​ஸ், ராஸ்​டன் சேஸ் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 7 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது.



Read More

Previous Post

“அது என்னுடைய பழைய போட்டோ“ கிண்டலாக வீடியோ வெளியிட்ட பிரேசில் மாடல் அழகி | இந்தியா

Next Post

சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு | pakistan not allowed 14 non sikhs in gurudwara nankana sahib

Next Post
சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு | pakistan not allowed 14 non sikhs in gurudwara nankana sahib

சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு | pakistan not allowed 14 non sikhs in gurudwara nankana sahib

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin