• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“அது என்னுடைய பழைய போட்டோ“ கிண்டலாக வீடியோ வெளியிட்ட பிரேசில் மாடல் அழகி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“அது என்னுடைய பழைய போட்டோ“ கிண்டலாக வீடியோ வெளியிட்ட பிரேசில் மாடல் அழகி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 06, 2025 10:51 AM IST

போர்ச்சுகீசிய மொழியில் பேசியுள்ள லாரீசா, இந்தியாவில் வாக்களிக்க எனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டது விசித்திரமாகவும், வியப்பாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மாடல் அழகி வெளியிட்ட வீடியோ
மாடல் அழகி வெளியிட்ட வீடியோ

“அது என்னுடைய பழைய போட்டோ“ கிண்டலாக வீடியோ வெளியிட்ட பிரேசில் மாடல் அழகி

ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாகக் குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, பிரேசில் மாடல் அழகியின் புகைப்படத்துடன் 22 வாக்குகள் பதிவானதாக ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தொடர்ந்து பிரேசில் மாடல் அழகி கிண்டலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஹரியானாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது பாஜக. இப்படி இருக்க, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, GEN-Z தலைமுறையினர் கவனமாக கேளுங்கள்… உங்களின் எதிர்காலத்தை பற்றியே பேசப்போவதாக ஆரம்பித்தார்.

ஹரியானா தேர்தல் கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் எனக் கூறப்பட்டதாகவும், ஆனால், முடிவு பாஜக வெற்றி பெற்றதாக காட்டியது என்றும் சுட்டிக்காட்டிய ராகுல்காந்தி, அங்கு தபால் வாக்குகளில் பெரும் மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

ஹரியானா தேர்தலில் 22 ஆயிரத்து 779 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோற்றதாகவும், அதிலும் 8 தொகுதிகளில் மிக குறைந்த அளவு வாக்குகள்தான் வித்தியாசம் என்றும் தெரிவித்த ராகுல்காந்தி, பிரேசிலைச் சேர்ந்த மாடலின் புகைப்படம் ஹரியானா பட்டியலில் பல பெயர்களுடன், 10 வாக்குச்சாவடிகளில் 22 வாக்குகளாக பதிவாகி இருந்தது எனக் கூறி அதற்கான படத்தை காண்பித்தார்.

இதே போன்று, 2 வாக்குச்சாவடிகளில் ஒரு பெண்ணின் விவரங்கள் மட்டும் 223 முறை பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ராகுல் குற்றம்சாட்டினார். இதன் காரணமாகவே முக்கிய சிசிடிவி ஆவணங்களை தேர்தல் ஆணையம் அழித்துவிட்டதாக தெரிவித்த அவர், ஹரியானாவில் சுமார் 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் போலி என்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் ஹரியானா மாநில வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் அழகியின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், தனது பழைய புகைப்படத்தை ஏன் பயன்படுத்துகிறார்கள் என அந்த மாடல் அழகி கிண்டலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போர்ச்சுகீசிய மொழியில் பேசியுள்ள லாரீசா, இந்தியாவில் வாக்களிக்க எனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டது விசித்திரமாகவும், வியப்பாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னிடம் பேட்டி கோரி, ஏராளமான செய்தியாளர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறுஞ்செய்தி அனுப்பி இருப்பதாகவும் பிரேசில் மாடல் அழகி லாரீசா குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 06, 2025 10:51 AM IST

Read More

Previous Post

தெதுறு ஓயாவில் பலியான 5 உயிர்கள்  – உயிர்பிழைத்த சிறுவனின் பதற வைக்கும் வாக்குமூலம்

Next Post

மிட்செல் சாண்ட்னர் போராட்டம் வீண்: டி20-ல் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே.இ.தீவுகள் | west indies beats New Zealand in T20

Next Post
மிட்செல் சாண்ட்னர் போராட்டம் வீண்: டி20-ல் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே.இ.தீவுகள் | west indies beats New Zealand in T20

மிட்செல் சாண்ட்னர் போராட்டம் வீண்: டி20-ல் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே.இ.தீவுகள் | west indies beats New Zealand in T20

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin