• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஹரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்: மோடி, அமித் ஷா மீது ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு | 25 lakhs fake voters in haryana rahul gandhi slams bjp

GenevaTimes by GenevaTimes
November 5, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஹரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்: மோடி, அமித் ஷா மீது ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு | 25 lakhs fake voters in haryana rahul gandhi slams bjp
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஹரி​யா​னா​வில் கடந்த ஆண்டு நடை​பெற்ற தேர்​தலில் 25 லட்​சம் வாக்​கு​களை திருடி பாஜக ஆட்​சி​யைப் பிடித்​த​தாக ஆதா​ரங்​களை வெளி​யிட்டு ராகுல் காந்தி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். குறிப்​பாக, பிரதமர் மோடி, உள்​துறை அமைச்​சர் அமித் ஷா ஆகியோருடன் சேர்ந்​து, தேர்​தல் ஆணை​யம் சதி செய்​த​தாக அவர் தெரி​வித்​துள்​ளார்.

பிஹார் மாநில முதல்​கட்ட தேர்​தல் இன்று நடை​பெறும் நிலை​யில், டெல்​லி​யில் உள்ள காங்​கிரஸ் தலை​மையகத்​தில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது:

கடந்த ஆண்டு நடை​பெற்ற ஹரி​யானா தேர்​தலின்​போது, அனைத்து கருத்​துக் கணிப்​பு​களுமே காங்​கிரஸ்​தான் வெற்றி பெறும் என்று தெரி​வித்​தன. ஆனால், தேர்​தல் முடிவு​கள் வேறு மாதிரி​யாக அமைந்​தன. வாக்​குத் திருட்​டின் மூலம் பாஜக​வுக்கு சாதக​மாக தேர்​தல் முடிவு​கள் மாற்​றியமைக்​கப்​பட்​டன.

இதற்​கான 100 சதவீத ஆதா​ரங்​களை “எச்​-பைல்​ஸ்” ஆக காங்​கிரஸ் தொகுத்துள்​ளது. அதில், ஒவ்​வொரு வாக்​கும் எவ்​வாறு திருடப்​பட்​டுள்​ளது என்று சான்​றுகளு​டன் நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது.

ஹரி​யா​னாவைப் போலவே மத்​திய பிரதேசம், சத்​தீஸ்​கர், மகா​ராஷ்டிர மாநிலங்​களில் நடை​பெற்ற தேர்​தல்​களி​லும் வாக்​குத் திருட்​டு​கள் நடை​பெற்​றுள்​ளன. இதனால் நாட்​டின் ஜனநாயக முறை சிதைக்​கப்​பட்​டுள்​ளதுடன், ‘ஜென் ஸீ’ இளைய சமு​தா​யத்​தினரின் எதிர்​கால​மும் அழிக்​கப்​பட்​டுள்​ளது. இதை இளைய தலை​முறை புரிந்​து​கொண்​டு, விழிப்​புணர்​வுடன் செயல்​படு​வது அவசி​யம்.

ஹரி​யானா தேர்​தலில் ஒரு நபர், ஒரே புகைப்பட அடை​யாள அட்​டையைக் கொண்டு 2 வாக்​குச் சாவடிகள் மூலம் 223 வாக்​கு​களை செலுத்​தி​யுள்​ளார். ஆனால், அதற்​கான சிசிடிவி ஆதா​ரங்​களை தேர்​தல் ஆணை​யம் அழித்​து​விட்​டது.

ஹரி​யானா வாக்​காளர் பட்​டியலில் 1.24 லட்​சம் வாக்​காளர்​களின் போட்​டோ போலி​யானது. 25 லட்​சம் வாக்​கு​கள் திருடப்​பட்​டுள்​ளன. இதில் 5.21 லட்​சம் போலி வாக்​காளர்​கள், 93,174 செல்​லாத வாக்​கு​கள், 19.26 லட்​சம் “பல்க்” வாக்​காளர்​கள் (ஒரே முகவரி​யில் பல வாக்​காளர்​கள்) அடங்​கு​வர். 8 பேரில் ஒரு​வர் போலி வாக்​காளர். ஒரே நபர் 18 முறை வாக்​களித்​துள்​ளார். காங்​கிரஸ் வெற்​றியை தடுப்​ப​தில் பாஜக​வுடன் தேர்​தல் ஆணை​யம் கைகோத்து செயல்​பட்​டுள்​ளது. தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் கு​மார் மற்​றும் 2 தேர்​தல் ஆணை​யர்கள் பாஜக​வுடன் சேர்ந்​து​கொண்​டு, ஹரி​யா​னா​வில் காங்​கிரஸின் வெற்​றியை தடுத்​துள்​ளனர்.

இந்​திய தேர்​தல் ஆணை​யம், பிரதமர் மோடி மற்​றும் உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவுடன் கூட்டு சேர்ந்​து, நாட்​டின் ஜனநாயக அடித்​தளத்தை அழித்து விட்​டது. இவ்​வாறு ராகுல் காந்தி கூறி​னார்.

ஜென் ஸீ இளைஞர்​களின் வாக்​குகளை திருடி பாஜக வெற்றி பெறு​வ​தாக ராகுல் காந்தி குற்​றச்​சாட்​டிய நிலையில், அதற்கு மத்​திய அமைச்​சரும், பாஜக தலை​வரு​மான கிரண் ரிஜிஜு அளித்த பதிலில், “அடிப்​படை ஆதா​ரமற்ற கட்​டுக்கதைகள் மூலம் ஜென் ஸீ இளைய தலை​

முறை​யினரை தூண்​டி​விடும் நடவடிக்​கை​யில் ராகுல் காந்தி ஈடு​பட்​டுள்​ளார். ஹரி​யானா வாக்​காளர் பட்​டியலுக்கு எதி​ராக இது​வரை யாரும் எந்த புகாரும் தெரிவிக்​க​வில்​லை. தோல்வி​களை மறைக்​கவே இவ்​வாறான பொய் குற்​றச்​சாட்​டு​களை ராகுல் அவ்​வப்​போது பரப்பி வரு​கிறார்” என்​றார்.

பிரேசிலியப் பெண்​… பிரேசில் நாட்​டைச் சேர்ந்த பெண்​ணின் புகைப்​படத்தை பயன்​படுத்தி ஹரி​யானா தேர்​தலில் மோசடி நடை​பெற்​ற​தாக ராகுல் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறும்​போது,“​வாக்​காளர் பட்​டியலில் ஒரு பெண்​ணின் புகைப்​படம் இடம்​பெற்​றுள்​ளது. பல்​வேறு இடங்​களில், பல்​வேறு பெயர்​கள் மற்​றும் விவரங்​களு​டன் அந்​தப் பெண்​ணின் புகைப்​படம் உள்​ளது.

சீமா, ஸ்வீட்​டி, சரஸ்​வ​தி, ராஷ்மி, வில்மா என்ற பெயர்​களில் 22 முறை அந்​தப் பெண் வாக்​களித்​துள்​ளார். ஆனால், அவர் இந்​தி​யர் அல்ல, பிரேசில் நாட்​டைச் சேர்ந்த மாத்​யூஸ் பெரோரோ. அந்​தப் பெண்​ணின் ஒரே புகைப்​படம் 22 பெயர்​களில் வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற்​றுள்​ளது” என்​றார்.

தேர்தல் ஆணையம் மறுப்பு: ஆனால், ராகுல் காந்​தி​யின் குற்​றச்​சாட்​டு​கள் ஆதா​ரமற்​றவை என்று தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து தேர்​தல் ஆணைய வட்​டாரங்​கள் கூறும்​போது, “வாக்​காளர் பட்​டியலில் குளறு​படி இருந்​தால், அதை அரசி​யல் கட்​சிகளால் நியமிக்​கப்​படும் வாக்​குச்​சாவடி முகவர்​கள் தைரிய​மாக சுட்​டிக்​காட்ட முடி​யும். பிறகு ஏன் காங்​கிரஸ் கட்சி முகவர்​கள் அதை செய்​ய​வில்​லை? ஒரு​வரின் பெயர் பல இடங்​களில் இடம்​பெறு​வதை தவிர்க்க மேற்​கொள்​ளப்​பட்ட திருத்​தத்​தின்​போதும், காங்​கிரஸ் முகவர்​கள் ஏன் தங்​களது எதிர்ப்​பு​களை பதிவு செய்​ய​வில்​லை?

தற்​போது போலி வாக்​காளர்​களை களைவதற்​காகத்​தான் வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு தீவிர திருத்​தம் மேற்​கொள்​ளப்​படு​கிறது. பிறகு ஏன்​ ராகுல்​ அதை தடுக்​கிறார்​? அவரது குற்​றச்​சாட்​டு பொய்​யானது மட்​டுமல்​ல, அடிப்​படை ஆதாரமற்​றது” என்​று தெரிவித்​தன.



Read More

Previous Post

அதிபரும் மகனும் ஹெரோயினுடன் கைது

Next Post

அணு ஆயுத பந்தயம் மீண்டும் தீவிரம்: புடினின் அதிரடி உத்தரவு

Next Post
அணு ஆயுத பந்தயம் மீண்டும் தீவிரம்: புடினின் அதிரடி உத்தரவு

அணு ஆயுத பந்தயம் மீண்டும் தீவிரம்: புடினின் அதிரடி உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin