• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

750 CIBIL ஸ்கோர் இருந்தும், கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுமா…? என்ன காரணம் தெரியுமா…? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 5, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
750 CIBIL ஸ்கோர் இருந்தும், கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுமா…? என்ன காரணம் தெரியுமா…? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எனவே, நல்ல கிரெடிட் ஸ்கோர் மட்டுமே போதுமானதாக இருக்காது. உங்களுடைய கடன் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு வங்கிகள் வேறு சில காரணிகளையும் கருத்தில் கொள்வார்கள். அவை என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

கடன் வருமான விகிதம் (DTI):

உங்களுடைய வருமானத்திற்கும், நீங்கள் வாங்கி இருக்கும் கடனுக்குமான விகிதம் என்பது ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. வங்கிகள் வழக்கமாக உங்களுடைய மொத்த EMIகள், உங்களது மாத வருமானத்தில் 40 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

ஒருவர் 1 லட்ச ரூபாய் மாத சம்பளம் வாங்கும்போது அவருடைய மொத்த EMIகளுக்கான தொகை 45,000 ரூபாய் எனில், கடன் வருமான விகிதம் என்பது 45 சதவீதமாக இருக்கிறது. இந்த சமயத்தில் 750க்கும் அதிகமான CIBIL ஸ்கோர் வைத்திருந்தாலும்கூட இவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

கடன் பயனீட்டு விகிதத்தின் முக்கியத்துவம்:

உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடனில் நீங்கள் எவ்வளவு தொகையை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பதும் உங்களுடைய கடன் அங்கீகரிக்கப்படுவதில் கருத்தில் கொள்ளப்படுகிறது. உங்களுக்கு வழங்கப்பட்ட கடன் உச்சவரம்பில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக நீங்கள் பயன்படுத்தி இருந்தால் அது ஒரு ரிஸ்க்காக கருதப்படுகிறது.

உதாரணமாக 2 லட்ச ரூபாய் கடன் உச்சவரம்பில் நீங்கள் 1 லட்ச ரூபாயை பயன்படுத்தி இருக்கும்போது, நீங்கள் 50 சதவீத கடனை உபயோகித்து இருக்கிறீர்கள். ஆகையால், இதனை கடன் வழங்குனர்கள் ஒரு எச்சரிக்கையாக கருதுவார்கள்.

கடன் வரலாற்றின் நீளம்:

வலுவான கிரெடிட் ஸ்கோர் மட்டும் போதுமானதாக இருக்காது. கடனை திருப்பிச் செலுத்தியதற்கான ஒரு நீண்ட வரலாறு கொண்ட கடன் பெறுநர்களை வங்கிகள் விரும்புகின்றனர். 6 மாத கிரெடிட் வரலாறு மட்டுமே கொண்ட ஒரு நபர் 750 ஸ்கோர் வைத்திருந்தாலும், 3 வருட தொடர்ச்சியான கடன் பேமெண்ட்கள் கொண்ட 720 கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்கும் நபரையே வங்கிகள் தேர்வு செய்வார்கள்.

பல்வேறு லோன் விண்ணப்பங்களால் ஏற்படும் சிக்கல்:

ஒரு குறுகிய காலகட்டத்தில் அடிக்கடி கடனுக்கான விண்ணப்பங்களை நீங்கள் சமர்ப்பிக்கும்போது வங்கிகள் சார்பாக செய்யப்படும் ஹார்ட் என்கொயரி உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை தற்காலிகமாக பாதிக்கலாம். 3 மாதங்களுக்குள் 3 விண்ணப்பங்களுக்கும் மேலாக நீங்கள் சமர்ப்பித்தால் உங்களுடைய கடன் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.

மேலும், உங்களுடைய வேலை சம்பந்தப்பட்ட வரலாறும் இங்கு கருத்தில் கொள்ளப்படுகிறது. அடிக்கடி நீங்கள் வேலை மாற்றத்தில் ஈடுபடும் நபர் என்றால் உங்களுடைய விண்ணப்பம் அதிக ரிஸ்க் நிறைந்ததாக கருதப்படுகிறது. 2 வருடங்களுக்குள் 3 அல்லது அதற்கும் அதிகமான பணி மாற்றங்களில் ஈடுபட்ட நபருடைய பொருளாதார நிலை சீரற்றதாக கணக்கிடப்படுகிறது.

கடன் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பது எப்படி?

கடன் வருமான விகிதத்தை 40% குறைவாக பராமரிக்க வேண்டும். அதேபோல நிலையான வேலை வரலாறு, உங்களுக்கு வழங்கப்பட்ட கடன் லிமிட்டில் 30 சதவீதத்திற்கும் குறைவாக பயன்படுத்துவது மற்றும் நீண்ட கடன் வரலாற்றை அமைப்பது, குறுகிய காலகட்டத்தில் பல்வேறு கடன் விண்ணப்பங்களை தவிர்ப்பது ஆகியவை முக்கியம். உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் முக்கியமானதாக இருந்தாலும், இந்த 5 விஷயங்களையும் நீங்கள் செய்யும்போது கட்டாயமாக உங்களுடைய கடன் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 05, 2025 3:21 PM IST

Read More

Previous Post

தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.. இந்தியா ஏ அணி அறிவிப்பு.. கேப்டனாக திலக் வர்மா நியமனம் | விளையாட்டு

Next Post

பள்ளி குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு ஆரம்பத்திலேயே பிரச்சினைகளை தீர்க்கத் தவறியதே காரணம் – சுல்தான் நஸ்ரின் – Malaysiakini

Next Post
பள்ளி குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு ஆரம்பத்திலேயே பிரச்சினைகளை தீர்க்கத் தவறியதே காரணம் – சுல்தான் நஸ்ரின் – Malaysiakini

பள்ளி குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு ஆரம்பத்திலேயே பிரச்சினைகளை தீர்க்கத் தவறியதே காரணம் – சுல்தான் நஸ்ரின் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin