வெளிநாட்டு ஊழியர்கள் பிளாட்டின் கீழ் தளத்தில் ஓய்வெடுத்ததை வீடியோ எடுத்து வசைபாடிய ஆடவர் குறித்த செய்திகளை நாம் முன்னர் வெளியிட்டோம்.
அவரின் காணொளிக்கு சிங்கப்பூரர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர்.
லாரிக்குள் இறந்த நிலையில் கிடந்த ஊழியர் – வேலைக்குச் செல்ல இருந்தவர் சடலமாக கிடந்த சோகம்
அதிலும் குறிப்பாக, தனியார் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக காணொளி வெளியிட்டு வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
confessionsofagrabdriver என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான அந்த காணொளியில், நள்ளிரவு நேரங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் சாலைகளில் வேலை பார்க்கும் காட்சிகள், மின் கம்பங்களை நடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
மேலும் சாலைகளில் பாதிப்பு ஏற்பட்டால் இரவு நேரங்களில் போக்குவரத்தை சரிசெய்வது, தெருக்களை சுத்தம் செய்வது, உயர கட்டிடங்களுக்கு வண்ணம் பூசுவது மற்றும் செடி, மரங்களை ஒழுங்குபடுத்துவது போன்ற காட்சிகளும் அதில் இடம்பெற்று இருந்தன.
சையத் அல்வி சாலையில் சிக்கிய கனரக வாகனம்: 2 மணிநேரம் பாதித்த போக்குவரத்து – விசாரணையில் ஓட்டுநர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கும் உணர்வுகள் இருக்கிறது, அவர்கள் படிக்காதவர்களோ அல்லது ஏழைகளோ அல்ல. அவர்களில் சிலர் நம்மை விட நன்கு படித்தவர்கள்.
அவர்களின் வாழ்க்கை சூழலின் காரணமாக அவர்கள் இங்கு பல்வேறு வேலைகளில் இருக்கின்றனர்.
அவர்களை நம்பி ஓர் குடும்பம் இருக்கிறது, அவர்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் வெளிநாடுகளில் கஷ்டப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டது அனைவரின் மனதிலும் ஆறுதல் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

