ஜூரோங் வெஸ்டில் உள்ள அடுக்கு மாடி கார் பார்க்கிங்கில் நேற்று முன்தினம் (நவம்பர் 3) லாரிக்குள் ஊழியர் ஒருவர் இறந்து கிடந்தார்.
இந்த சம்பவம் அன்று காலை 12 மணிக்குள் பயனியர் மாலில் உள்ள கார் பார்க்கிங்கில் நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.
சையத் அல்வி சாலையில் சிக்கிய கனரக வாகனம்: 2 மணிநேரம் பாதித்த போக்குவரத்து – விசாரணையில் ஓட்டுநர்
69 வயதுமிக்க அந்த ஊழியர் ஒருவர் லாரிக்குள் அசையாமல் கிடந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பின்னர், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) துணை மருத்துவர்கள் குழு அவரை சோதித்து சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இதில் சதிச் செயல் ஏதும் நடந்ததாக சந்தேகிக்கவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
விசாரணைகள் தொடர்கின்றன.
அந்த லாரி ஸ்காஃபோல்டிங் எனப்படும் சாரக்கட்டு அமைக்கும் சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனத்தின் பெயரைக் கொண்டிருந்ததாகவும் அது கூறியது.
அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, இறந்தவர் தங்கள் நிறுவன ஊழியர்களில் ஒருவர் என்றும், அவர் அன்று வேலைக்குச் செல்ல இருந்தவர் என்றும் கூறினார்.

