சிங்கப்பூரில் திருத்தப்பட்ட சட்டத்தின்கீழ், இனி மோசடி குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கட்டாய பிரம்படி விதிக்கப்படும்.
குற்றவியல் சட்டம் திருத்த மசோதாவின் கீழ், மோசடி செய்பவர்கள் மற்றும் மோசடி கும்பல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்பவர்கள் அல்லது உறுப்பினர்களுக்கு 6 முதல் 24 பிரம்படிகள் வரை விதிக்கப்படும்.
TOTO: ஒரு கோடி சிங்கப்பூர் டாலர் பரிசு: வாடிக்கையாளர்களே ரெடியா?
மேலும், தனிப்பட்ட வங்கி கணக்குகளை கொடுத்து பண பரிமாற்ற மோசடிகளுக்கு உதவி செய்யும் நபர்களுக்கும் இனி 12 பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.
மோசடி குற்றங்களுக்கு ஏற்கனவே இருக்கும் தண்டனைகளுடன் சேர்த்து கூடுதலாக இந்த பிரம்படி தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் பிரபல “முஸ்தபா சென்டர்” ஆன்லைன் விற்பனை தளம் தொடக்கம் – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
“2020 முதல் இந்த ஆண்டின் முதல் பாதி வரை, மோசடி தொடர்பாக சுமார் 190,000 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் S$3.7 பில்லியன் பணத்தை இழந்துள்ளனர்.”
“சிங்கப்பூரில் பதிவான குற்றங்களில் சுமார் 60 சதவீத குற்றம் மோசடிகள் தொடர்பானவை” என்று உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சிம் ஆன் கூறினார்.
ஆடையின்றி சுமார் 1.5 கி.மீ தூரம் ஓடிய ஆடவர் – ஜாலான் புசாரில் பரபரப்பு

