இதையெல்லாம் தாண்டி, டிரம்ப் ஜோஹ்ரான் மம்தானியை கம்யூனிஸ்ட் என்றும், தீவிர அச்சுறுத்தலாகவும் குறிப்பிட்டார்.
மேலும், “ஜோஹ்ரான் மம்தானி மேயராக வெற்றி பெற்றால், நியூயார்க் நகரத்திற்கு கிடைக்க வேண்டிய ஃபெடரல் நிதியை வெகுவாக குறைப்பேன்.
அவரது தலைமையின் கீழ் நியூயார்க் நகரம் வெற்றி பெறவோ, பிழைக்கவோ வாய்ப்பே இல்லை” என்று எச்சரித்திருந்தார்.
ஜோஹ்ரானுக்கு அனுபவமே இல்லை என்றும் அவர் சாடியிருந்தார்.

இருந்தபோதும், இப்போது சூப்பர் வெற்றியை பெற்றுள்ளார் ஜோஹ்ரான் மம்தானி. இது டிரம்ப்க்கு எதிராக நியூயார்க் மக்கள் எடுத்த முக்கிய முடிவாகக் கருதலாம். காரணம், டிரம்ப் வெளிப்படையாகவே நிதியை காட்டி மிரட்டினாலும், 2 மில்லியனுக்கும் மேல் வாக்களித்து சாதனை வெற்றியை ஜோஹ்ரானுக்கு வழங்கியுள்ளனர் நியூயார்க் மக்கள்.
அமெரிக்காவின் மிக முக்கிய நகரமான நியூயார்க் நகரத்தில், டிரம்ப் கொள்கைகளுக்கு எதிரான ஒருவரை மேயராக மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது மிக முக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது.
ஜோஹ்ரான் மம்தானி வரும் ஜனவரி 1-ம் தேதி பொறுப்பேற்பார்.

