• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது நியூஸிலாந்து அணி! | new zealand whitewashed england in odi series

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது நியூஸிலாந்து அணி! | new zealand whitewashed england in odi series
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெலிங்டன்: இங்​கிலாந்​துக்கு எதி​ரான 3-வது ஒரு நாள் கிரிக்​கெட் போட்​டி​யில், நியூஸிலாந்து அணி 2 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இதையடுத்து 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் தொடரை நியூஸிலாந்து அணி முழு​மை​யாகக் கைப்​பற்​றியது.

இங்​கிலாந்து கிரிக்​கெட் அணி நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 3 டி20 மற்​றும் 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடி வரு​கிறது. இதில் முதலில் நடை​பெற்ற டி20 தொடரை 1-0 என இங்​கிலாந்து கைப்​பற்​றியது.

இதையடுத்​து, நடை​பெற்ற ஒரு​நாள் தொடரில் முதல் 2 போட்​டிகளின் முடி​வில் 2-0 என நியூஸிலாந்து தொடரை கைப்​பற்றி விட்​டது. இந்​நிலை​யில் இரு அணி​களுக்​கும் இடையி​லான 3-வது ஒரு​நாள் போட்டி நேற்று வெலிங்​டனில் நடை​பெற்​றது.இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி​யின் கேப்​டன் மிட்​செல் சாண்ட்​னர் பந்​து​வீச்சை தேர்வு செய்​தார்.

ஜேமி ஓவர்​டன் 68 ரன்கள்: இங்​கிலாந்து அணி​யில் முதல் 4 வீரர்​களான ஜேமி ஸ்மித் 5, டக்​கெட் 8, ரூட் 2, ஹாரி புரூக் 6 ரன்​கள் எடுத்து வீழ்ந்​தனர்​. ஜேமி ஓவர்​டன் சற்று தாக்​குப்​பிடித்து விளை​யாடி 68 ரன்​கள் சேர்த்​தார். மற்ற வீரர்​கள் சொற்ப ரன்​களில் வீழ்ந்​தனர். இதனால் இங்​கிலாந்து அணி 40.2 ஓவர்​களில் 222 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.நியூஸிலாந்து தரப்​பில் டிக்​னர் 4 விக்​கெட்​டும் ஜேக்​கப் டஃபி 3 விக்​கெட்​டும் வீழ்த்​தினர்.

இதைத் தொடர்ந்து 223 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய நியூஸிலாந்​து, 44.4 ஓவர்​களில் 8 விக்​கெட் இழப்​புக்கு 226 ரன்​கள் சேர்த்து வெற்றி கண்​டது. டேவன் கான்வே 34, ரச்​சின் ரவீந்​திரா 46, வில் யங் 1, டேரில் மிட்​செல் 44, டாம் லேதம் 10, மைக்​கேல் பிரேஸ்​வெல் 13, மிட்​செல் சாண்ட்​னர் 27, நேதன் ஸ்மித் 2 ரன்​கள் எடுத்​தனர்.

ஆட்டநாயகன்: கடைசி நேரத்​தில் ஜகாரி பவுல்க்ஸ் 14 ரன்​களும், பிளேர் டிக்​னர் 18 ரன்​களும் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர். இதையடுத்து 2 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் நியூஸிலாந்து வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்​கில் முழு​மை​யாகக் கைப்பற்றியது.

ஆட்டநாயகனாக பிளேர் டிக்னரும், தொடர்நாயகனாக டேரில் மிட்செலும் தேர்வு செய்யப்பட்டனர்.



Read More

Previous Post

“என் தலைமையிலான அமர்வு வழக்கு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை” – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் | இந்தியா

Next Post

‘குடியேற்ற தொழிலாளர்களை வழங்க 10 நிபந்தனைகள் சிண்டிக்கேட்டை மீண்டும் உயிர்ப்பிக்கும்’ – Malaysiakini

Next Post
‘குடியேற்ற தொழிலாளர்களை வழங்க 10 நிபந்தனைகள் சிண்டிக்கேட்டை மீண்டும் உயிர்ப்பிக்கும்’ – Malaysiakini

‘குடியேற்ற தொழிலாளர்களை வழங்க 10 நிபந்தனைகள் சிண்டிக்கேட்டை மீண்டும் உயிர்ப்பிக்கும்’ – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin