• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இனி வெற்றி மேல் வெற்றியே..! – உலக சாம்பியன் ஹர்மன்பிரீத் கவுர் உற்சாகம் | From now on it will be victory World Champion Harmanpreet Kaur excited

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இனி வெற்றி மேல் வெற்றியே..! – உலக சாம்பியன் ஹர்மன்பிரீத் கவுர் உற்சாகம் | From now on it will be victory World Champion Harmanpreet Kaur excited
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நவிமும்பை: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் நேற்று முன்​தினம் தென் ஆப்​பிரிக்க அணியை 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி முதல் சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​துள்ள ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி. முதலில் பேட் செய்த இந்​திய அணி ஷபாலி வர்மா (87), தீப்தி சர்மா (58), ஸ்மிருதி மந்​தனா (45), ரிச்சா கோஷ் (34) ஆகியோரது சிறப்​பான பேட்​டிங்​கால் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 298 ரன்​கள் குவித்​தது.

299 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி​யானது தீப்தி சர்​மா, ஷபாலி வர்மா ஆகியோரது சிறப்​பான பந்​து​வீச்​சால் 45.3 ஓவர்​களில் 246 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. கேப்​டன் லாரா வோல்​வார்ட் 101 ரன்​கள் விளாசிய போதி​லும் மற்ற வீராங்​க​னை​களிடம் இருந்து சிறந்த செயல் திறன் வெளிப்​ப​டாத​தால் தென் ஆப்​பிரிக்க அணி தோல்​வியை சந்​தித்​தது.

இந்த வெற்​றி​யானது 1983-ம் ஆண்டு கபில்​தேவ் தலை​மையி​லான இந்​திய ஆடவர் அணி முதன் முறை​யாக உலகக் கோப்பை வென்று வரலாற்று சாதனை நிகழ்த்​தி​யதை நினை​வூட்​டும் வகை​யில் அமைந்​தது. எனினும் மகளிர் உலகக் கோப்​பை​யில் இந்​திய அணி பட்​டம் வென்​றுள்​ளது 50 வருட போராட்​டங்​களுக்கு கிடைத்த மாபெரும் வெற்​றி​யாகவே பார்க்​கப்​படு​கிறது. 1973-ம் ஆண்​டில் இருந்து இது​வரை 13 முறை மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் நடை​பெற்​றுள்​ளது. ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்து மற்​றும் நியூஸிலாந்து ஆகிய அணி​கள் மட்​டுமே அனைத்து தொடர்​களி​லும் விளை​யாடியுள்​ளன. இவற்​றில், ஆஸ்​திரேலியா 7 முறை​யும், இங்​கிலாந்து 4 முறை​யும், நியூஸிலாந்து ஒரு​முறை​யும் கோப்பை வென்​றுள்​ளன.

1976-ல் விளை​யாடத் தொடங்​கிய மகளிர் அணி​யினர், 50 ஆண்​டு​களை கடந்து இப்​போது​தான் முதல்​முறை​யாக உலகக் கோப்​பையை வென்று சாதித்​துள்​ளனர். 2005 மற்​றும் 2017-ம் ஆண்​டு​களில் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறிய போதி​லும் இந்​திய அணி​யால் வெற்​றியை கோப்​பையை முத்​தமிட முடி​யாமல் போனது. மேலை நாடு​கள் மட்​டுமே ஆதிக்​கம் செலுத்​திய மகளிர் கிரிக்​கெட்​டில் தற்​போது முதல் ஆசிய அணி​யாக இந்​தியா கோப்​பையை வென்று சாம்​பியன் பட்​டம் வென்ற 4-வது நாடாகப் பட்​டியலில் இடம்​பிடித்​துள்​ளது.

சாம்​பியன் பட்​டம் வென்ற பின்​னர் இந்​திய அணி​யின் கேப்​ட​னான ஹர்​மன்​பிரீத் கவுர் கூறிய​தாவது: இது ஆரம்​பம்​தான். இந்​தத் தடையை உடைக்க நாங்​கள் விரும்​பினோம். இதை ஒரு பழக்​க​மாக்​கு​வதே எங்​கள் அடுத்த திட்​டம். நாங்​கள் காத்​திருந்த தருணம் வந்​து​விட்​டது. நாங்​கள் தொடர்ந்து முன்​னேற விரும்​பு​கிறோம். இது முடிவு அல்ல, வெறும் ஆரம்​பம்.

லாரா வோல்​வார்ட்​டும், சுனே​வும் சிறப்​பாக பேட் செய்து கொண்​டிருந்​தனர். அப்​போது நான் ஷபாலி வர்​மாவை பார்த்த போது அவருக்கு ஒரு ஓவரை​யா​வது கொடுக்க வேண்​டும் என என்​னுடைய உள்​ளுணர்வு கூறியது. அது​தான் எங்​களுக்கு திருப்​பு​முனை​யாக அமைந்​தது. இறு​தி​யில் தென் ஆப்​பிரிக்க வீராங்​க​னை​கள் சற்று பதற்​றம் அடைந்​தனர். அதை நாங்​கள் அறு​வடை செய்​தோம். சரி​யான நேரத்​தில், தீப்தி சர்மா விக்​கெட்​டு​களை வீழ்த்​தி​னார். இவ்​வாறு ஹர்​மன்​பிரீத்​ கவுர்​ கூறினார்.



Read More

Previous Post

பிஹாரில் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பதை உறுதி செய்ய பாஜகவினருக்கு மோடி அறிவுறுத்தல் | PM Modi directs party workers to ensure women voter turnout in Bihar

Next Post

Gopichand Hinduja : ஹிந்துஜா குழுமத்தின் சேர்மன் கோபிசந்த் ஹிந்துஜா காலமானார்.. | வணிகம்

Next Post
Gopichand Hinduja : ஹிந்துஜா குழுமத்தின் சேர்மன் கோபிசந்த் ஹிந்துஜா காலமானார்.. | வணிகம்

Gopichand Hinduja : ஹிந்துஜா குழுமத்தின் சேர்மன் கோபிசந்த் ஹிந்துஜா காலமானார்.. | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin