• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘கடவுளின் திட்டம்’ – மனம் திறக்கும் ஷபாலி வர்மா | Women’s WC | its gods plan team india player shafali verma about womens world cup

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘கடவுளின் திட்டம்’ – மனம் திறக்கும் ஷபாலி வர்மா | Women’s WC | its gods plan team india player shafali verma about womens world cup
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நவிமும்பை: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று சாதனை படைத்​துள்​ளது இந்​திய அணி. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெரு​மை​யை​யும் பெற்​றுள்​ளது.

இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி​யின் வெற்​றி​யில் தொடக்க வீராங்​க​னை​யான ஷபாலி வர்​மா​வின் மட்டை வீச்​சும் பிர​தான பங்கு வகித்​தது. 78 பந்​துகளை சந்​தித்த அவர், 2 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 87 ரன்​கள் விளாசி மிரட்​டி​னார். இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் அதிக ரன்​கள் விளாசிய இளம் வீராங்​கனை என்ற சாதனையை​யும் அவர், படைத்​தார்.

பேட்​டிங்​கில் அபார​மாக செயல்​பட்ட ஷபாலி வர்​மா, பந்​து​வீச்​சிலும் நெருக்​கடி​யான தருணத்​தில் 2 விக்​கெட்​களை வீழ்த்தி திருப்​பு​முனையை ஏற்​படுத்​திக் கொடுத்​திருந்​தார். 299 ரன்​களை விரட்​டிய தென் ஆப்​பிரிக்க அணி ஒரு கட்​டத்​தில் 20 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 113 ரன்​கள் குவித்து வலு​வாக இருந்​தது. அப்​போது ஷபாலி வர்மா சுனே லூஸ், மரிஸான் காப் ஆகியோரை தனது அடுத்​தடுத்த ஓவர்​களில் ஆட்​ட​மிழக்​கச் செய்து ஆட்​டத்​தின் போக்கை இந்​திய அணி​யின் பக்​கம் இழுத்​துக் கொண்​டு​வந்​தார்.

இத்​தனைக்​கும் ஷபாலி வர்​மா, உலகக் கோப்பை தொடருக்​கான இந்​திய அணி அறிவிக்​கப்​பட்ட போது அவரது பெயர் இல்​லாமலேயே இருந்​தது. மோச​மான பார்ம் காரண​மாக அவருக்கு அணி​யில் இடம் கிடைக்​க​வில்​லை. மாறாக அந்த நேரத்​தில் சீராக ரன்​கள் சேர்த்து வந்த பிர​திகா ராவல் தொடக்க வீராங்​க​னை​யாக தேர்​வாகி இருந்​தார். லீக் சுற்​றில் பிர​திகா ராவல், நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான முக்​கிய​மான ஆட்​டத்​தில் சதம் விளாசி அசத்​தி​யிருந்​தார். ஆனால் துர​திருஷ்ட​வச​மாக வங்​கதேச அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் பீல்​டிங்​கின் போது காயம் அடைந்து தொடரில் இருந்து வில​கி​னார் பிர​திகா ராவல். இதன் காரண​மாகவே 21 வயதான ஷபாலி வர்​மாவுக்கு வாய்ப்பு கிடைத்​தது.

அப்​போது ஹரி​யானா அணிக்​காக சூரத் நகரில் நடை​பெற்ற டி20 தொடருக்​காக ஷபாலி வர்மா தீவிர​மாக தயா​ராகி வந்​தார். இந்​திய அணி​யில் இருந்து உடனடி​யாக அழைப்பு வந்​ததும் நவி​மும்பை புறப்​பட்​டுச் சென்ற அவர், அங்​குள்ள பல்​கலைக்​கழக மைதானத்​தில் தீவிர பேட்​டிங் பயிற்சி செய்​தார். அரை இறுதி ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ராக களமிறங்​கிய ஷபாலி வர்மா 10 ரன்​களில் ஆட்​ட​மிழந்து ஏமாற்​றம் அளித்​தார். ஆனால் இறு​திப் போட்​டி​யில் பேட்​டிங், பந்​து​வீச்சு என இரண்​டிலும் அற்​புத​மாக செயல்​பட்டு இந்​திய அணி வரலாற்று சாதனை நிகழ்த்​து​வதற்கு உறு​துணை​யாக இருந்​தார்.

இறு​திப் போட்​டிக்கு பின்​னர் ஷபாலி வர்மா கூறிய​தாவது: அரை இறு​திக்கு முன்பு எனக்கு அழைப்பு வந்​த​போது, நான் உண்​மை​யிலேயே அதிர்ச்​சி​யடைந்​தேன். கடைசி நிமிடத்​தில் இது​போன்ற வாய்ப்பு கிடைப்​பது அடிக்​கடி நடப்​ப​தில்​லை. விஷ​யங்​களை எளிமை​யாக வைத்​துக்​கொண்டு அந்த தருணத்தை அனுபவிக்க வேண்​டுமென எனக்​குள் நானே கூறிக் கொண்​டேன். இறு​திப் போட்​டி​யில் ரன்​கள் எடுத்​ததும், விக்​கெட்​டு​களை வீழ்த்​தி​யதும், ஒரு கனவு நனவாகியது போல் உணர்ந்​தேன். இதெல்​லாம் கடவுளின் திட்​டம் என்று நான் உண்​மை​யிலேயே நம்​பு​கிறேன்.

நான் அணி​யில் மீண்​டும் இணைந்த நாளி​லிருந்​து, எல்​லோரும் என்னை இங்​கேயே நீண்ட காலம் இருந்​ததை போல உணர வைத்​தனர். தலைமை பயிற்​சி​யாளர் அமோல் மஜூம்​தார், கேப்​டன் ஹர்​மன்ப்​ரீத் கவுர் ஆகியோர் பயமின்றி விளை​யாடுங்​கள், இயல்​பான ஆட்​டத்தை வெளிப்​படுத்​துங்​கள், தவறுகளைப் பற்றி கவலைப்பட வேண்​டாம் என்று என்​னிடம் கூறி​னார். அந்த சுதந்​திரம் எனக்கு மிகுந்த நம்​பிக்​கை​யைத் தந்​தது. சக வீராங்​க​னை​கள் அனை​வரும் ஒரு​வருக்​கொரு​வர் ஆதர​வளித்​தனர். யாராவது சோர்​வாக இருந்​தால், மற்​றவர்​கள் அவர்​களை உற்​சாகப்​படுத்​து​வார்​கள். அது​தான் இந்த அணியை மிக​வும் சிறப்​பான​தாக்​கியது.

ஆரம்​பத்​தில் நான் அணிக்கு தேர்வு செய்​யப்​ப​டாதது வேதனை​யாக இருந்​தது. அதேவேளை​யில் அணி​யில் உள்ள வீராங்​கைனை​கள், ‘நீ திரும்பி வரு​வாய், தயா​ராக இரு’ என்று என்​னிடம் தொடர்ந்து கூறி வந்​தனர். அவர்​களிட​மிருந்​தும் என் குடும்​பத்​தினரிட​மிருந்​தும் கிடைத்த அந்த நம்​பிக்கை என்​னைத் தொடர்ந்து வழிநடத்​தி​யது. அதுவே இப்​போது உலகக் கோப்பை வெற்​றி​யாள​ராக இங்கே நிற்​க​வைத்​துள்​ளது.

அரை இதி​யில் ஆஸ்​திரேலி​யாவை வீழ்த்​தி​யது எங்​களுக்கு மிகப்​பெரிய ஊக்​கத்தை அளித்​தது. நாங்​கள் அவர்​களிடம் பலமுறை தோற்​றிருக்​கிறோம், அதனால் அந்த வெற்றி எல்​லா​வற்​றை​யும் மாற்​றியது. ஒவ்​வொரு வீராங்​க​னை​யும் இறு​திப் போட்​டி​யில், குறிப்​பாக மைதானத்​தில் தங்​களால் முடிந்த

அனைத்​தை​யும் வெளிப்​படுத்​தினர். அது​தான் இந்த வெற்​றியை மிக​வும் உணர்ச்​சிவசப்​படுத்​தி​யது மற்​றும் எங்​கள் அனை​வருக்​கும் மிக​வும் சிறப்பு வாய்ந்​த​தாக மாற்​றியது. இவ்​​வாறு ஷ​பாலி வர்​​மா கூறி​னார்​.



Read More

Previous Post

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி கோர விபத்து! பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் | இந்தியா

Next Post

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு: 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை

Next Post
அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு: 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு: 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin