Last Updated:
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே பயணிகள் ரயில் – சரக்கு ரயில் மோதி 4 பேர் பலி. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டதில் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம், கெவாரா சாலை–பிலாஸ்பூர் இடையே ரயில் எண் 68733 எனும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்று வழக்கம் போல் பயணித்துக்கொண்டிருந்தபோது, மாலை 4 மணிக்கு பிலாஸ்பூர் ரயில் நிலையத்திற்கும் கட்டோரா நிலையத்திற்கும் இடையே சரக்கு ரயிலோடு மோதியுள்ளது.
இதில் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி முழுவதுமாக சரக்கு ரயில் மீது ஏறி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், மீட்பு படையினர் விபத்து பகுதிக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
#WATCH | Bilaspur, Chhattisgarh: Four people have lost their lives and others are injured as the coaches of a MEMU train and a goods train collided between Gatora–Bilaspur at about 16:00 hours.
(Visuals from the spot) pic.twitter.com/qQfjyklX91— ANI (@ANI) November 4, 2025
இந்த விபத்து குறித்து பேசிய டி.சி. சஞ்சய் அகர்வால், “பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயிலின் முதல் பெட்டி மற்றும் கடைசி பெட்டி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
அதேபோல், ஐ.ஜி. சஞ்சீவ் சுக்லா, “பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சிலர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது. ரயிலுக்குள் சிக்கியிருப்பவர்களையும் மீட்பதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார். விபத்தில் ஒரு பெட்டி, சரக்கு ரயில் மீது ஏறி விபத்து ஏற்பட்டிருப்பதும், ரயிலில் இன்னும் சிலர் சிக்கியிருப்பதாக ஐ.ஜி. தெரிவித்திருப்பதும், பலரும் காயமடைந்திருப்பதும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமோ எனும் அச்சம் எழுந்துள்ளது.
November 04, 2025 6:47 PM IST


