Last Updated:
லீக் சுற்றின்போது இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் போட்டி முடிந்த பின்னர் கை குலுக்குவதை தவிர்த்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்
மீண்டும் பாகிஸ்தான் வீரருக்கு கை குலுக்குவதை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தவிர்த்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று போட்டிகள் நிறைவு பெற்று தற்போது சூப்பர் 4 சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த சூப்பர் 4 முதல் போட்டியில் வங்கதேச அணி இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்நிலையில் 2ஆவது போட்டியாக இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இரு அணிகளும் தக்க வைக்க முயலும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக அமையும்.
இந்த மேட்ச்சின்போது டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். வழக்கமாக டாஸ் போடப்பட்டு முடிந்ததும் இரு அணி கேப்டன்களும் கைகளை குலுக்கி (Hand Shake) வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார்கள்.
அதன் பிறகு வர்ணனையாளர் கேப்டன்களிடம் அணி வீரர்கள் குறித்து கேள்விகளை கேட்பார். இந்நிலையில் டாஸ் போடப்பட்டதும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவுடன் கைகுலுக்க சூர்ய குமார் யாதவ் தவிர்த்து விட்டார்.
ஏற்கனவே லீக் சுற்றின்போது இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் போட்டி முடிந்த பின்னர் கை குலுக்குவதை தவிர்த்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்
அதேபோன்று இன்றைக்கு டாஸ் நிகழ்வின்போதும் சூர்யகுமார் யாதவ் நடந்து கொண்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
September 21, 2025 8:32 PM IST


