Last Updated:
EPF ஊழியர்களுக்கு EDLI திட்டம் மூலம் 2.5 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. இது குறித்த முழுவான விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்
எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம் மூலமாக இயங்கி வரும் மிகவும் பிரபலமான ஓய்வு கால சேமிப்பு திட்டத்தின் கீழ் கிடைக்கும் EDLI திட்டம் பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம் நடத்தி வரும் பிரபலமான ஓய்வு கால சேமிப்பு திட்டத்தில் ஊழியர் மற்றும் நிறுவனம் ஆகிய இருவருமே குறிப்பிட்ட அளவு தொகையை பங்களிப்பதன் மூலமாக சிறந்த பொருளாதார எதிர்காலத்தை உருவாக்குவதற்கு உதவுகிறது. இது ஒரு பிரபலமான ஓய்வு கால சேமிப்பு திட்டம் என்பதால் நம்மில் பெரும்பாலானவர்கள் இது பற்றிய தகவல்களை அறிவோம். ஆனால் பெரும்பாலான EPF சப்ஸ்கிரைபர்களுக்கு எம்ப்ளாயீஸ் டெபாசிட் லிங்டு இன்சூரன்ஸ் (EDLI) திட்டத்தின் கீழ் கிடக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டம் பற்றி தெரிவது கிடையாது.
EDLI திட்டம் என்பது என்ன?
EDLI திட்டம் EPF சப்ஸ்கிரைபர்களுக்கு ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது. ஊழியர் பணி சேவை காலத்தில் இறந்து போகும் பட்சத்தில் மெம்பர்களுக்கான நாமினி குறைந்தபட்சம் 2.5 லட்சம் ரூபாய் தொகையையும், அதிகபட்சம் 7 லட்ச ரூபாய் வரையிலும் பெறுவார்கள். இது ஊழியரின் மாத சம்பளம் மற்றும் EPF பேலன்ஸ் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
EDLI திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதி பெறுகிறார்கள்?
*தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள்
*EPF எம்பிளாயிகள் ஆட்டோமேட்டிக்காக இந்த மெம்பர்ஷிப்பை பெறுகிறார்கள்
*அசாம் மாநிலத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலை ஊழியர்களுக்கு இது பொருந்தாது.
EDLI திட்டத்தின் பலன்கள் யாவை?
EDLI திட்டத்தின்படி, EPF மெம்பர்கள் பணி சேவை காலத்தின் போது இறந்து போகும் பட்சத்தில் 7 லட்சம் ரூபாய் வரையிலான ஆயுள் காப்பீட்டை நாமினிகளுக்கு வழங்குகிறது. நாமினி அல்லது சட்டபூர்வமான வாரிசுகளுக்கு உறுதியளிக்கப்பட்ட தொகை வழங்கப்படும். இதற்கான கிளைம்கள் 20 நாட்களுக்குள் பிராசஸ் செய்யப்பட்டு, குடும்பத்திற்கான உடனடி பொருளாதார ஆதரவு வழங்கப்படும்.
ஒருவேளை நிறுவனம் பங்களிக்காமல் போகும் பட்சத்தில் என்ன ஆகும்?
EDLI விதிகளின்படி, பணிபுரியும் நிறுவனம் பங்களிப்புகளை செய்யாத பட்சத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் 1% அபராதம் வசூலிக்கப்படும். எனினும் நிர்வாக மாற்றம், இணைவு அல்லது பொருளாதார சிக்கல்கள் போன்றவற்றிற்கு இந்த அபராதத்தை குறைக்கலாம் அல்லது தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச பலன்களை பெறுவது எப்படி?
உறுதியளிக்கப்பட்ட பலன்களானது கடந்த 12 மாதங்களுக்கான சராசரி PF பேலன்ஸ் பொருத்து அமையும். பலன்களை கணக்கீடு செய்வதற்கு கடந்த 12 மாதங்களுக்கான சராசரி PF பங்களிப்புகள் (ஊழியர் + நிறுவனம் + வட்டி) ஆகியவை கருத்தில் கொள்ளப்படுகிறது. அதிகபட்ச உறுதி அளிக்கப்பட்ட பலன்களை பெறுவதற்கு PF அக்கவுண்டில் தொடர்ச்சியாக பங்களிப்புகள் நடைபெறுவதை ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
November 04, 2025 8:46 AM IST
ரூ.7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு திட்டம் வழங்கும் அசத்தல் திட்டம்.. EPF மெம்பர்களுக்கு சூப்பர் ஆஃபர்!


