“தி டிராவல் ஃப்யூஜிடிவ்” (The Travel Fugitive) என்று ஆன்லைனில் அழைக்கப்படும் பிரிட்டிஷ் பயண வலைப்பதிவரான டேவிட் சிம்ப்சன், சமீபத்தில் தனது பயண வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார். அவர் அந்த ஹோட்டலில் தங்கிய அனுபவத்தை நம்பமுடியவில்லை என்று விவரித்ததோடு, “நான் இதற்கு முன் பல தடவை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருக்கிறேன். ஆனால், இங்கு நான் உணர்ந்த அரவணைப்பை எதோடும் ஒப்பிடமுடியாது” என்றார். இவரது இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகிய நிலையில், இந்த ஹோட்டலைப் பற்றிய ஆர்வத்தை மக்களிடையே தூண்டியுள்ளது.


